இந்திய வங்கிகள் தற்போது விழித்துக்கொள்ளாவிட்டால், இந்தியாவின் பெரிய அளவிலான வங்கி வர்த்தகம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அபாயம் இருப்பதாக உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
யூபிஐ பேமெண்ட்ஸ் எனப்படும் பணமில்லா கட்டணம் செலுத்தும் முறைகளில், கூகுள் பே மற்றும் போன் பே சேவைகள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தெளிவாக சொல்லவேண்டு என்றால் பேமண்ட்ஸ் சந்தையில் மொத்தமுள்ள 100 சதவீதத்தில் இந்த இரு சேவைகள் 85 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது. இதில் இந்திய வங்கிகள் மிகவும் பின்தங்கி உள்ளது.
இந்நிலையில், இதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து சமீபத்தில் நடைபெற்ற இன்பினிட்டி போரம் என்கிற கூட்டத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் உதய் கோட்டக் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது: “பேமெண்ட்ஸ் சேவைக்கு வருமானம் இல்லை என கூறப்படும் நிலையில், இரண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டும் அதில் அதிகப்படியான ஆதிக்கத்தை தெலுத்தி வருகின்றன. ஆனால் கன்ஸ்யூமர் பின்டெக் நிறுவனங்கள் நிதித்துறையை தாண்டி மிகப்பெரிய நுகர்வோர் வருமானம் ஈட்டும் வர்த்தக மாடல்களை வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், வங்கி ஒழுங்குமுறை சட்டப் பிரிவு 6-ன் கீழ் வங்கிகள் நிதித்துறை அல்லாத சேவைகளை அளிக்கக் கூடாது என விதி உள்ளது. ஆனால் இது மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. பின்டெக் சேவை நிறுவனங்கள் இதற்கு மத்தியில் எல்லை கோடு இட வேண்டும். இல்லையென்றால் இந்திய வங்கிகளுக்கு இதனால் நிதி நிலைத்தன்மை பெரும் பிரச்சனை ஆகிவிடும்.
இந்திய வங்கிகள் தற்போது விழித்துக்கொள்ளாவிட்டால், இந்தியாவின் பெரிய அளவிலான வங்கி வர்த்தகம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அபாயம் இருப்பதாகவும், இந்த பிரச்சனையை நம் நாட்டின் கொள்கை வடிவமைப்பாளர்கள் முக்கிய பிரச்சனையாக கருதி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.