சர்ச்சைக்குரிய வதந்திக்கு அதிரடி முற்றுபுள்ளி வைத்த  மத்திய அரசு ......!!!

 
Published : Nov 28, 2016, 11:46 AM ISTUpdated : Sep 19, 2018, 02:14 AM IST
சர்ச்சைக்குரிய வதந்திக்கு அதிரடி முற்றுபுள்ளி வைத்த  மத்திய அரசு ......!!!

சுருக்கம்

சர்ச்சைக்குரிய வதந்திக்கு அதிரடி முற்றுபுள்ளி வைத்த  மத்திய அரசு ......!!!

பழைய  ரூபாய்  நோட்டுக்கள்  செல்லாது என்ற  பிரதமரின்  அறிவிப்புக்கு பின், நாடே  பதற்றத்தில்  இருந்து வருகிறது.  ஆனால்  அதற்குண்டான  காரணங்கள்  தெரிந்த  மக்கள்  தற்போது, சற்று  பதற்றத்தில் இருந்து  விடுப்பட்டு உள்ளார்கள்.

இந்நிலையில்,  “ எரியும்  நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மற்ற ரூபாய்  நோட்டுக்கள் 100,50 ரூபாய்களுக்கு  கூட  தடை  விதிக்கப்படும்  என  சில  நாட்களாக  புரளி கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இதற்கெல்லாம் முற்றுபுள்ளி   வைத்துள்ளது மத்திய அரசு.அதாவது “ நோட்டு வாபஸ் கட்டுக்கதை அழிப்பு’ இந்த  தலைப்பில் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதில், ரூ.50, ரூ.100 உள்பட எந்த நோட்டுகளையும் தடை செய்யும் திட்டம் எதுவும் இல்லை எனவும்,  தொடர்ந்து இந்த நோட்டுகள் புழக்கத்தில்  இருக்கும்  எனவும்  தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும், புதியதாக  வந்துள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டில் சிப்பு  பொருத்தப்பட்டுள்ளதாக  வெளிவந்துள்ள செய்தியும் பொய்  என்று  விளக்கமளித்துள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.



 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!