மத்திய அரசின் அடுத்த அசத்தல் அதிரடி !!! நாடு முழுவதும் பணமில்லா வர்த்தகத்திற்கு தயாராகிறது புதிய  'ஆப்'....!!!

First Published Nov 27, 2016, 3:47 PM IST
Highlights


மத்திய அரசின் அடுத்த அசத்தல் அதிரடி ! நாடு முழுவதும் பணமில்லா வர்த்தகத்திற்கு தயாராகிறது புதிய  'ஆப்'....!!!

டிஜிட்டல்  இந்தியாவை   உருவாக்கும்  முயற்சியில் இறங்கியுள்ள  பிரதமர் மோடி.....தொடர்ந்து பல  அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார்.......இதன் தொடர்ச்சியாக நாடு  முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்கு விக்கும் நோக்கில், 'சர்காரி' என்ற பெயரில், 'மொபைல் ஆப்'பை, மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

இந்த, 'ஆப்'பை பயன்படுத்த, மானிய விலையில், ஏழைகளுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கவும், அரசு திட்டமிட்டு உள்ளது. என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நாடு முழுவதும், பணமில்லா வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, மத்திய அரசு முனைந்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, பெட்ரோல் பங்க்குகள், பால் விற் பனை நிலையங் கள், கல்வி நிறுவனங்கள், ரயில் மற்றும் பஸ் டிக்கெட்டுகள் என, அனைத்து இடங்களிலும் பயன்படுத்தும் வகை யில், 'சர்காரி' என்ற பெயரில், மின்னணு முறை யில் பணம் செலுத்தும், 'மொபைல் ஆப்' உருவாக்கப்படுகிறது.

அதன் மூலம், சிறிய தேவைகளுக்கு கூட, கையில் பணமின்றி, மின்னணு முறையில் பணம் செலுத்த முடியும். இதை பயன்படுத்த, 'ஸ்மார்ட் மொபைல் போன்' தேவை; எனவே,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு, மானிய விலையில் ஸ்மார்ட் மொபைல் போன் வழங்க, அரசு முடிவு செய்துள்ளதாக  செய்திகள் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சகமும் இணைந்து    நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதுபற்றிய அறிவிப்புகள்,விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக  நாடு  முழுவதும், மத்திய தகவல் தொழில் நுட்பத் துறையின் முயற்சியில், பொது சேவை மையங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், அவற்றின் மூலம், குறைந்தபட்சம், 10 வர்த்தகர்கள் சேர்ந்து, 'டெபிட் கார்டு' பயன்படுத்தும், விதமாக 'ஸ்வைபிங் மிஷின்' அல்லது 'மொபைல் போன்' மூலம் பணப்பரிவர்த் தனை செய்ய,  வர்த்தகர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட  உள்ளதாகவும்  செய்திகள்  வெளியாகி உள்ளது....

நல்ல  விஷியம் தானே .....! இது குறித்த  அதிகார பூர்வ  அறிவிப்பு  மிக விரைவில் வெளிவரும் என  எதிர்பார்கபடுகிறது.......!!!

 

click me!