தங்கத்தில்  மட்டும், மூன்றில் ஒரு பங்கு கருப்புப்பணமா ....? திடுக்கிடும் தகவல்....!!!

First Published Nov 26, 2016, 3:28 PM IST
Highlights


தங்கத்தில்  மட்டும், மூன்றில் ஒரு பங்கு கருப்புப்பணமா ....?

இந்தியாவை பொறுத்தவரையில்,தங்கத்தின்  தேவை ஆண்டுக்கு 1,000 டன் வரை  இருந்தது. இந்நிலையில், 500,1000   ரூபாய்  நோட்டுகள்  செல்லாது என  அறிவிக்கப்பட்ட பின்பு,  தற்போது,  அனைவரும்  தங்களிடம் உள்ளத் பணத்தை கொண்டு  தங்கம்  வாங்க  ஆர்வம்  காட்டினர்.

இதன் விளைவாக, கடந்த  இரண்டு ஆண்டுகளில்  இல்லாத  அளவிற்கு, தங்கத்தின்  தேவை  அதிகரித்தது....

ஆனால், தங்கம்  வாங்கும்  பணத்தை  கருத்தில்  கொண்டால், மூன்றில் ஒரு பங்கு கருப்பு பண முதலீட்டில்தான் வாங்கப்பட்டிருக்கும் என்பது மத்திய அரசின் கணக்கு....

ஏனென்றால், கருப்பு பண பதுக்கலுக்கு பிரச்னையற்ற முதலீடாக தங்கம் இருப்பதோடு, அரசுக்கு வரவேண்டிய வரி வருவாயையும் இது தடுத்துவிடுகிறது.  

அதே சமயத்தில் வெளிநாடுகளில் கரன்சியாக செலுத்தி தங்கத்தை வாங்கி கடத்தி வருவதும், நோட்டு செல்லாது அறிவிப்பால்  குறைந்திருப்பதாக  தற்போது செய்திகள் வெளியாகி  உள்ளது.

click me!