பாரத் பெட்ரோலியத்தை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம் போடும் மத்திய அரசு..!

By Asianet TamilFirst Published Oct 1, 2019, 10:37 AM IST
Highlights

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவனத்தை வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) நிறுவனத்தை வெளிநாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பிபிசிஎல் நிறுவனத்தின் 53.3 சதவீதப் பங்குகளை மத்திய அரசு வைத்திருக்கிறது. இந்த ஆண்டு முதலீ்ட்டு விற்பனை இலக்கான ரூ.1.05 லட்சம் கோடியை எட்டுவதற்கு மத்திய அரசுக்கு வேறு வழியில்லை என்பதால், இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் 26 சதவீத பங்குகளை விற்பனை செய்தாலே அரசுக்கு ரூ.26 ஆயிரம் கோடியும், விற்பனை உரிமம் உள்ளிட்டவை ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசு பிபிசிஎல் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தால், நல்ல விலையில் வாங்க சவுதி நிறுவனத்தின் அராம்கோ முதல், பிரான்ஸின் டோட்டல் எஸ்ஏ நிறுவனம் வரைபோட்டி போடுகின்றனர். இதற்குமுன் வாஜ்பாய் பிரதமராக இருந்த நேரத்தில் பிபிசிஎல் மற்றும் ஹெச்பிசிஎல் நிறுவனத்தை தனியாருக்கு விற்க அப்போதைய பாஜக  முயற்சித்தது.

ஆனால், இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2003-ம் ஆண்டு உச்ச நீதிமன்றண் அளித்த தீர்ப்பில் தனியார் மயமாக்கும் முன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறுவது அவசியம். சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவால் ஹெச்பிசில் நிறுவனத்தின் 34.1 சதவீதப் பங்குகளை மத்திய அரசு விற்பனை செய்ய இருந்தது தடுக்கப்பட்டது. ஆதலால், இந்தமுறையும் தனியாருக்க விற்க வேண்டுமானால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயம்.

click me!