மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது! விரைவில் வெளியாகவுள்ள குட் நியூஸ்!

By SG Balan  |  First Published Jun 8, 2024, 3:29 PM IST

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் முடிவு செய்து அறிவிக்கப்படும். 


மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. அதன்படி ஜூலையில் அது குறித்த அறிவிப்பு வெளிவர உள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் 50% அகவிலைப்படியை பெறுகிறார்கள். இது ஜனவரி 2024 முதல் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், ஜூலை மாதம் அகவிலைப்படி 4 - 5 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய அரசுப் பணியாளர்கள் சம்பளம் உயரப் போகிறது.

Tap to resize

Latest Videos

ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு, ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு (AICPI Index) எண்களின் அடிப்படையில் முடிவு செய்து அறிவிக்கப்படும். 

தற்போது நடைமுறையில் உள்ள 50 சதவீதம் அகவிலைப்படி ஜனவரி 2024 இல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான 4% அகவிலைப்படி அதிகரிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது.

கொளுத்திப் போட்ட தமிழிசை! அண்ணாமலைக்கு ஆப்பு எப்போ? ரவுண்டு கட்டி அடிக்கும் மூத்த பாஜக நிர்வாகிகள்!

ஜூலை மாதத அகவிலைப்படி உயர்வு (DA Hike) பற்றி ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. செப்டம்பர் மாதத்தில் இருந்து இது வழங்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. அப்போது முந்தைய மாத பாக்கி தொகையும் சேர்த்து வழங்கப்படும். 

ஜூலை மாத அகவிலைப்படியைக் கணக்கிட ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படவில்லை. ஜனவரி 2024 க்கு உரிய எண்களை மட்டுமே வெளியிட்டுள்ளது. விரைவில் முழுமையான விவரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி, அகவிலைப்படி 50% ஆனவுடன் அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, அகவிலைப்படி தொகை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்பட வேண்டும். ஆனால் இது கட்டாயம் அல்ல. எனவே, அடுத்த முறை அகவிலைப்படி 50% க்கு மேல் செல்லும்போதுதான் அது பூஜ்ஜியம் ஆக்கப்படும் என்று சிலர் கூறுகிறார்கள்.

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஏஐசிபிஐ குறியீட்டு எண்கள் வெளியிடப்பட்டு அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகலாம் என நம்பப்படுகிறது. ஆனால் இதற்கு அதிகாரபூர்வமாக எந்தவித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை.

ஒரு சட்டப்பேரவை தொகுதியில் கூட முதலிடம் பிடிக்க முடியல! பாஜகவின் பேசப்படாத சோகக் கதை!

click me!