cbdt tax: tds form: TDS விதிமுறையில் புதிய மாற்றத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் ஜூலை 1ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
TDS விதிமுறையில் புதிய மாற்றத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாற்றம் வரும் ஜூலை 1ம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.
இந்த புதிய மாற்றத்தின் கீழ் மருந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள் அளிக்கும் இலவசப் பொருட்கள் , பரிசுப்பொருட்கள், சமூக ஆர்வலர்கள் அளிக்கும் பொருட்கள் ஆகியவற்றுக்கு டிடிஎஸ் பிடிக்கப்படும்.
2022-23 ஆண்டு பட்ஜெட்டில் இந்த புதியவிதியை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார். இதன்படி, வருவாய் வீணாவதைத்தடுக்கும் பொருட்களுக்கு பரிசுப் பொருட்கள், இலவசப் பொருட்கள் பெறும்போது டிடிஎஸ் பிடிக்கப்படும்.
வருமானவரிச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட புதிய விதியின்படி, ஆண்டுக்கு ரூ20ஆயிரத்துக்கு மேல் ஒருவர் தொழில்ரீதியாகவோ அல்லது வர்த்தகரீதியாகவோ பரிசுப் பொருட்களைப் பெற்றால் அதிலிருந்து 10 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும்.
இதன்படி சமூக ஊடகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒருவர் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து ஒரு பொருளை பிரபலப்படுத்துவதற்காகப் பெற்று, அந்தப் பொருளை தக்கவைத்துக் கொண்டாலும் அது வருமனவரிச் சட்டத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 194ஆர் பிரிவில் சேர்க்கப்பட்டு வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்படும். ஆனால், பொருளை திரும்பஒப்படைத்தால் இந்த விதி பொருந்தாது.
மருத்துவர்களைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் இலவச மாத்திரைகள், மருந்துகளை மருந்து நிறுவனங்களிடம் பெற்று அதை விற்பனை செய்தாலும் இந்த புதிய நடைமுறை பொருந்தும்
ஒரு மருந்து நிறுவனத்தால் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு மருத்துவருக்கு இலவசமாக மருந்து சாம்பிள் வழங்கினால், மருந்து நிறுவனம் சார்பில் டிடிஎஸ் பிடிக்கப்பட்டு மருத்துவரின் கணக்கில் சேர்க்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் வருமானவரிச் சட்டம் 194ஆர்-படி,தனிநபர் ஒருவர் தள்ளுபடிகள் அதாவது ரொக்கமாகவோ அல்லது சுற்றுலா பேக்கேஜ், அல்லது உறவினர்கள் மூலம் பரிசுப் பொருட்கள் பெற்றாலோ அதுவும் டிடிஎஸ் கணக்கில் வரும்.
அதேசமயம் வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளி்க்கும் சிறப்புத் தள்ளுபடி, ரொக்கத் தள்ளுபடி, விற்பனைக்கழிவு ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.