india forex reserves: இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு 60 ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் சரிந்தது

By Pothy RajFirst Published Jun 18, 2022, 10:52 AM IST
Highlights

Forex Reserves Fall Below $600 Billion: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் கடந்த 10ம் தேதிநிலவரப்படி சரிந்து, 59600 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 60ஆயிரம் கோடி டாலருக்கும் கீழ் கடந்த 10ம் தேதிநிலவரப்படி சரிந்து, 59600 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் தேதி முடிந்த வாரத்தோடு மட்டும் இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு 4500 கோடி டாலர் குறைந்துள்ளது. 
அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்து வருவது, இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீட்டை விற்று வெளியேறுவது அதிகரிப்பதாலும் டாலர் தேவை அதிகரித்துள்ளது. இது தவிர கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. இதனால் கடந்த சில மாதங்களாகவே சந்தையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை விற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக அமெரிக்கடாலர் மதிப்பு வலுப்பெறும்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச்சரியும். அதை ஈடுகட்ட ரிசர்வ் வங்கி அதிகமான டாலர்களை சந்தையில் வெளியிட வேண்டிய சூழலால்தான் செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் நெருக்கடிக்கு ஆளானது. நாளுக்குநாள் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து ரூ.78க்கு சரி்ந்துள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 5 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அந்நியச்செலாவணி கையிருப்பு 3600 கோடி டாலர் குறைந்தது. அதன்பின் தற்போது 4500 கோடி டாலர் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி இதுவரை இல்லாத வகையில் அந்நியச் செலாவணி கையிருப்பு உச்சபட்சமாக 64200 கோடி டாலர் கையிருப்பு உயர்ந்தது. இதுஏறக்குறைய 15 மாதங்கள் இறக்குமதிக்குத் தேவையான தொகையாகும்.

ஆனால், தற்போது 59,600 கோடி டாலர் என்பது  அடுத்த 10 மாதங்களுக்குத் தேவையான இறக்குமதியை சமாளிக்க போதுமானதாக இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணம் வெளிநாட்டுக் கரன்ஸி சொத்து மதிப்பு(எப்சிஏ) குறைந்ததுதான். அதுமட்டுமல்லாமல் தங்கம் இருப்பும் குறைந்துள்ளது. 

எப்சிஏ மதிப்பு 453.50 கோடி டாலர் குறைந்து, 53224.40 கோடி டாலராகக் குறைந்துள்ளது. தங்கம் கையிருப்பு 10 லட்சம் டாலர் குறைந்து, 4,0842 கோடி டாலராகச் சரிந்துள்ளது. சர்வதேச நிதியத்தில் இந்தியாவுக்கான சிறப்பு வரைவு உரிமையும் 2.3 கோடி டாலர் குறைந்து, 1838 கோடி டாலராகச் சரிந்துள்ளது. 

இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!