
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வது நாள் உயர்ந்த நிலையி்ல் இன்று(ஜூன்18)குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராம் ரூ.4,755க்கும், சவரண் ரூ.38,200க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,765 ஆகவும், சவரணுக்கு, ரூ. 80 குறைந்து, ரூ.38 ஆயிரத்து120க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த 5 தேதி முதல் சவரண் ரூ.38 ஆயிரம் அளவிலேயே இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை 75 புள்ளிகள் வரை உயர்த்தியது. இதைத் தொடரந்து முதலீட்டாளர்கள் கவனம் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் குறைந்து, கிராம் ரூ.66.30க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.66,300க்கு விற்பனையாகிறது.கடந்த 3 நாட்களாக வெள்ளி விலையில் மாற்றம் இல்லாத நிலையில் மீண்டும் ஏற்ற இறக்கத்தைச் சந்திக்கிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.