
உங்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம் என்று வருமான வரித்துறை வரம்பு நிர்ணயித்துள்ளது என்பது தெரியுமா உங்கள் வீட்டில் அதிக பணத்தை வைத்திருக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அது உங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். தொழிலதிபர்களாக இருப்பவர்கள் பலர் தங்கள் வீட்டில் அதிக அளவு பணத்தை வைத்துக்கொள்ளவேண்டிய தேவை ஏற்படலாம். அந்தத் தொகையை மறுநாள் வங்கியில் டெபாசிட் செய்தால் பரவாயில்லை. ஆனால், அதிக தொகையை வீட்டில் வைத்துக்கொள்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
வரம்பை அறிந்துகொள்ளுங்கள்
வருமான வரித் துறையின் விதிகளின்படி, உங்கள் வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான வரம்பை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்ட மாநிலங்களில், பலரது வீடுகளில் அதிக அளவில் பணம் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் தினமும் பல கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். அப்படி நேராமல் இருக்கு சாமானியர்கள் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்வது அவசியம்.
ஆதாரம் இருக்கவேண்டும்
புலனாய்வு அமைப்பினர் வீட்டில் அதிக பணம் வைத்துள்ளதைக் கண்டுபிடித்தால் பணம் எப்படி, எங்கிருந்து வந்தது என்று ஆதாரத்தைக் காட்ட வேண்டும். நீங்கள் அந்த பணத்தை சரியான வழியில் சம்பாதித்திருந்தால், அது தொடர்பான முழுமையான ஆவணங்கள் உங்களிடம் இருக்கவேண்டும். அத்துடன் வருமான வரி கணக்கும் முறையாக தாக்கல் செய்துவந்திருந்தால் பீதி அடையத் தேவையில்லை. ஒரு வேளை ஆதாரத்தைக் காட்ட முடியாவிட்டால், அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற பெரிய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும்.
137 சதவீதம் அபாரதம்
வீட்டில் கணக்கில் வராத பணம் பிடிபட்டால் எவ்வளவு அபராதம் செலுத்த வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) விதிமுறை உள்ளது. அதன்படி வீட்டில் வைத்திருக்கும் பணத்தின் ஆதாரத்தை நீங்கள் சொல்ல முடியாவிட்டால், 137 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
16.8 கோடி பேரின் அந்தரங்க தகவல்களை திருடி விற்ற கும்பல் கைது! ஹைதராபாத் போலீஸ் அதிரடி
நினைவில் கொள்ளவேண்டியவை
ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பண பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். ஒரே நேரத்தில் 50,000 ரூபாய்க்கு மேல் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ பான் எண்ணைக் கொடுக்க வேண்டியது அவசியம். ஒரு நபர் ஒரு வருடத்தில் 20 லட்சம் ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அவர் பான் (PAN) மற்றும் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
பான் மற்றும் ஆதார் பற்றிய தகவல்களை தெரிவிக்கத் தவறினால் ரூ.20 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாகக் கொடுத்து எதையும் வாங்க முடியாது. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக வாங்கினால் பான் மற்றும் ஆதார் அட்டையின் நகல் கொடுக்க வேண்டும். 30 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை ரொக்கமாக வாங்கினால் அல்லது விற்றால் அந்த நபர் புலனாய்வு அமைப்பின் விசாரணை வளையத்திற்குள் வரலாம். கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் செலுத்தும்போது, ஒரு நபர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால், விசாரணை நடத்தப்படும்.
ஒரு நாளில் உங்கள் உறவினர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் பெறமுடியாது. தேவைப்பட்டால் இந்த பரிவர்த்தனையை வங்கி மூலம் மேற்கொள்ளலாம். வங்கியில் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக வேறு நபரிடம் கடன் வாங்கவும் முடியாது. ரொக்கமாக நன்கொடை வழங்குவதற்கான வரம்பு ரூ.2,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாதம் 84 ஆயிரம் சம்பளம் ரொம்ப கம்மி!பஞ்சாப் சட்டசபையில் எம்எல்ஏ பேச்சு!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.