ஆண்டுக்கு பிபிஎஃப்-பில் ஒன்றரை லட்சம் முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆகலாம்; எப்படின்னு பார்க்கலாம் வாங்க!!

எந்த ஒரு முதலீட்டாளருக்கும் நீண்ட கால முதலீடு சிறந்த முதலீடாக இருக்கும். ஓய்வுக்குப் பின்னர் தங்களது நிதி தேவையை இந்த முதலீடு பூர்த்தி செய்யும். பிபிஎஃப் விதிகளின்படி, முதலீட்டாளர் தனது பிபிஎப் கணக்கில் 100 ரூபாய் டெபாசிட் செய்து எந்த வங்கியிலும் அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்திலும் பிபிஎஃப் கணக்கை தொடங்கலாம்.

How to become a crorepati in investing PPF in 30 years

இந்த முதலீட்டை விடாமல் தொடர்ந்து செலுத்தி வந்தால், பிபிஎஃப் கணக்கு முதிர்ச்சியடையும் போது அவர் கோடீஸ்வரராக ஆகலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை பார்க்கலாம். 

பிபிஎஃப் அடிப்படை விதி என்ன?
உங்களிடம் கணக்கு இருந்தால், பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 500 டெபாசிட் செய்ய வேண்டும். பிபிஎஃப் கணக்கில் 15 ஆண்டுகள் செலுத்தும் வகையில் காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 1.5 லட்சம் வரை அல்லது ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 12 தவணைகளில் டெபாசிட் செய்யலாம்.

பிபிஎஃப் எவ்வளவு பயனுள்ளது 
பிபிஎஃப் கணக்கு வருமான வரி விலக்கு பிரிவின் கீழ் வருகிறது. அங்கு தனிநபர் ஆண்டுக்கு 1.5 லட்சம் வரையிலான வைப்புத் தொகையில் பிரிவு 80C-ன் கீழ் வருமான வரிச் சலுகை பெறலாம். இது தவிர, பிபிஎஃப் முதிர்வுத் தொகைக்கும் வரிவிலக்கு உண்டு. பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் 7.1 சதவீதம் மற்றும் இது காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். ஆனால் முதலீட்டாளர்கள் முதிர்வுத் தொகையை திரும்பப் பெறாமல் பிபிஎஃப் உடன் தொடரலாம். முதலீட்டாளர் தனது பிபிஎஃப் கணக்கை முதிர்ச்சியடைந்த பிறகும் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். 

Hindenburg : ஹிண்டன்பர்க்கின் அடுத்த டார்கெட்.!! அதானிக்கு அடுத்து மாட்டப்போகும் கம்பெனி எது தெரியுமா.?
 
முதிர்வுக்குப் பிறகும் நீட்டிக்க முடியுமா 
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கை மேலும் நீடிக்க விரும்பினாலும், நீட்டிக்கலாம்.  பிபிஎஃப் கணக்கின் காலம் முடிவடைந்ததும், பணத்தை திரும்பப் பெறுவதற்கு பதிலாக மறு முதலீட்டு விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இதன் மூலம், பிபிஎஃப் முதிர்வுத் தொகை மற்றும் அதன் முதலீடு ஆகிய இரண்டுக்கும் வட்டி கிடைக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் கோடீஸ்வரர் ஆகலாம். பல இடங்களில் தனியாரை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாறுவதை விட இதுபோன்ற முதலீடுகளை மக்கள் மேற்கொள்ளலாம். பாதுகாப்பானது.

பிபிஎஃப் கால்குலேட்டர்
வருமானம் பெறும் ஒருவர் 30 வயதில் பிபிஎஃப் கணக்கைத் தொடங்கி, அவரது பிபிஎஃப் கணக்கை மூன்று முறை நீட்டித்தால், இந்த கணக்கு வைத்திருப்பவர் 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய முடியும். ஒரு முதலீட்டாளர் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்தை பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 30 வருட முதலீட்டிற்குப் பிறகு, பிபிஎஃப் மீதான தற்போதைய வட்டி விகிதமான 7.10 சதவீதத்தின் அடிப்படையில், அவருக்கு சுமார் ரூ.1.54 கோடி கிடைக்கும்.

பிபிஎஃப் கணக்கீட்டின் அடிப்படையில், 30 வருட முதலீட்டில் ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்தை முதலீடு செய்தால், இந்தத் தொகை 45 லட்சமாக கிடைக்கும். முதிர்ச்சியடைந்த பிறகு, இந்தத் தொகையின் மீது கிடைக்கும் வாடி மட்டும் 1,09,50,911 கோடி ரூபாயாக இருக்கும். 

பாதுகாப்பான முதலீட்டுக்கு தபால்துறை வழங்கும் பக்காவான சேமிப்புத் திட்டம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios