இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான அதானி, மோசடியாக பங்குகளின் மதிப்பை உயர்த்தியாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் நிறுவனம் அதானி குழுமம், போலி நிறுவனங்கள் தொடங்கி அரங்கேற்றிய மோசடிகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் செய்த தில்லுமுல்லு, பொய்கணக்கு, பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது என அனைத்து மோசடிகளையும் வெளிச்சம்போட்டு காட்டியது. இந்த அறிக்கை வெளியான நாள் முதல் பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சீட்டுக் கட்டுபோல் சரிந்தது. இந்தியாவின் பொருளாதாரத்தையே ஹிண்டன்பெர்க் அறிக்கை அசைத்து காட்டியது என்று சொல்லலாம்.
இதையும் படிங்க..வந்தாச்சு சென்னை - கோவை வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நிற்கும் தெரியுமா.? முழு விபரம்
அதானி நிறுவனத்தின் மீது ஹிண்டன்பெர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே அதானி குழும நிறுவனங்களில் செய்த முதலீடுகள் பற்றிய விவரத்தை வழங்குமாறு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஹிண்டன்பெர்க் நிறுவனம் அடுத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes)ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விரைவில் புதிய அறிக்கை வெளியிடப்படும். இதுவும் மிகப்பெரியது என்று பதிவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை எது தொடர்பானது, எப்போது வெளியிடப்படும், நேரம் போன்ற எந்த தகவல் பற்றியும் குறிப்பிடவில்லை. இது எதை பற்றிய அறிக்கையாக இருக்கும் என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க..பாலியல் தொல்லை: வசமாக சிக்கிய அடுத்த பாதிரியார்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்