சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்

By Raghupati RFirst Published Mar 22, 2023, 11:18 AM IST
Highlights

செயற்கை நுண்ணறிவான AIயால் பலரும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பலருக்கும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலக அளவில் மிகவும் குறுகிய காலத்தில் புகழ் பெற்று மக்களின் செல்வாக்கைப் பெற்ற செயற்கை நுண்ணறிவு கருவியாக (AI) இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் இருந்து அனைத்து விதமான நிறுவனங்களுக்கு சாட்ஜிபிடி தேவை என்பது அத்தியாவசியமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பயனர் செல்லும் அறிவுரைகளைப் பின்பற்றி அதற்கான பதிலைத் தரும் வகையில் அவை உள்ளன. அதன்படி உங்களது பணியை சாட்சிபிடியிடம் சொன்னால் அவை உங்களுக்கான வேலை செய்யும்.

செயற்கை நுண்ணறிவு புதிதாக வேலைகளை உருவாக்கும் என பலர் பல உறுதி அளித்தாலும், உண்மையில் இதன் வளர்ச்சி மனிதர்களிடையே கவலையையே அதிகரித்துள்ளது.  பணியாளர்கள் முதல் மேலாளர்கள் வரை செயற்கை நுண்ணறிவால் ஒருநாள் தாங்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு (AI) பொறியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

TeamLease Digital என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பாக தரவு விஞ்ஞானிகள் மற்றும் இயந்திர கற்றல் (ML) பொறியாளர்கள் அதிக தேவை உள்ள தொழில்களில் கிட்டத்தட்ட 45,000 வேலைவாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்பு ஒருபக்கம் குறைந்தாலும், மறுபக்கம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க..பொதுமக்கள் கவனத்திற்கு.! உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

இதன்மூலம் அளவிடக்கூடிய இயந்திர கற்றல் எம்எல் (ML) பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்துவது, ஸ்கிரிப்டிங் மொழிகளில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் வழக்கமான ML மாதிரிகளை உருவாக்கும் திறன் கொண்ட AI நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் சம்பள விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை டேட்டா மற்றும் எம்எல் இன்ஜினியர்கள் ஆண்டுக்கு ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கலாம். டேட்டா ஆர்கிடெக்ட்கள் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதே போன்ற துறைகளில் எட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் ஆண்டுக்கு ரூ.25 முதல் 45 லட்சம் வரை அதிக சம்பளம் பெறலாம் என்று கூறியுள்ளது. வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு காரணமாக தொழில் துறை எந்த மாதிரியான தாக்கத்தை பெறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படிங்க..ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு - வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

இதையும் படிங்க..1 நிமிஷத்துக்கு 5 லட்சம் கொடுங்க.! மாப்பிள்ளையிடம் ரகசிய டீல் போட்ட நடிகை ஹன்சிகாவின் தாய்

 

click me!