Ugadi 2023 : பொதுமக்கள் கவனத்திற்கு.! உகாதியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை - முழு விபரம் இதோ

By Raghupati RFirst Published Mar 22, 2023, 9:09 AM IST
Highlights

உகாதி தினமான இன்று பல்வேறு பல்வேறு பண்டிகைகள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் 22 ஆன இன்று வங்கிகளுக்கு பல்வேறு மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

இந்து சாஸ்திரங்களின்படி பிரம்மதேவன் தன்னுடைய படைப்புத்தொழிலை தொடங்கிய நாளை தான் உகாதி பண்டிகையாக நாம் வருடந்தோறும் கொண்டாடி வருகிறோம். இத்தகைய சிறப்புமிக்க நாளில் செய்யும் சுபகாரியங்களுக்கு நாள், நட்சத்திரம் கூட பார்க்க தேவையில்லை. 

அதுமட்டுமல்லாமல், கலியுகம் தொடங்கிய நாளாகவும் இந்த நாள்தான் சொல்லப்படுகிறது. தமிழ், மலையாள மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. அதுபோல் தெலுங்கு, கன்னட மொழியின் மாதங்கள் நிலவின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது. தெலுங்கு வருடப் பிறப்பை உகாதி அல்லது யுகாதி என்று அழைக்கின்றனர்.

உகாதி என்று மட்டுமல்லாமல், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று மார்ச் 22, 2023 அன்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மூடப்பட்டிருக்கும் மாநில வாரியான பட்டியலை இங்கே கொடுத்துள்ளோம்.

ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பட்டியலின்படி, குடி பத்வா, உகாதி பண்டிகை, பீகார் திவாஸ், சஜிபு நோங்மப்பன்பா, தெலுங்கு புத்தாண்டு தினம் மற்றும் முதல் நவராத்திரி ஆகிய பண்டிகைகளை கொண்டாடுவதற்காக மார்ச் 22, 2023 அன்று வங்கிகள் மூடப்படும்.

1) பேலாபூர்

2) பெங்களூரு

3) சென்னை

4) ஹைதராபாத் - தெலுங்கானா

5) இம்பால்

6) ஜம்மு

7) மும்பை

8) நாக்பூர்

9) பனாஜி

10) பாட்னா

11) ஸ்ரீநகர்

இதையும் படிங்க..TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?

click me!