சென்னையில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்; கோவை, மதுரையில் புதிய மெட்ரோ ரயில் திட்டம்: பட்ஜெட்டில் அறிவிப்பு!!

By Dhanalakshmi G  |  First Published Mar 20, 2023, 12:59 PM IST

கோவை மாநகரில் அவினாசி சாலை - சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும் என்று இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து சட்டசபையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது அறிவிப்பில், ''சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் 63,256 கோடி ரூபாய் செலவில் 119 கி. மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் வழித்தடமாக பூந்தமல்லி பணிமனை முதல் கோடம்பாக்கம் மின் நிலையைப் பிரிவு வரையிலான உயர் வழித்தடம் 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மெட்ரோரயில் திட்டத்திற்கு ரூ. 10,000கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவை மெட்ரோ ரயில்:
கோயம்புத்தூர் நகரம் இந்தியாவிலேயே வளர்ந்து வரும் இரண்டாம் நகரங்களில் முதனமையானது. ஜவுளி, தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், மருத்துவ வசதிகள், உற்பத்தித்துறை என பல்தொழில்கள் இருப்பிடமாகவும், தொழில் முனைக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ள கோயம்புத்தூரின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரின் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவினாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி 9,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

Tap to resize

Latest Videos

undefined

மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய்..! செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும்- தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

மதுரை மெட்ரோ ரயில்:
தூங்கா நகரமான மதுரை தென்னகத்தின் வளர்ச்சிக்கு மையமாக உள்ளது. இங்கு மெட்ரோ ரயில் திட்டம் 8,500 ரூபாய் மதிப்பில் மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்திற்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தையும் ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த இரண்டு நகரங்களில் ஒன்றிய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்றார்.

தமிழர்களுக்கு மட்டுமல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அறிவிப்பு - சுகாதாரத்துறை அறிவிப்புகள்

click me!