சொந்த வீடு வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை

Published : May 20, 2025, 05:39 PM IST
Home Loan

சுருக்கம்

வீடு வாங்கும் முன் பில்டரின் நற்பெயர், அடிப்படை வசதிகள், சந்தை விலை, ஆவணங்கள் மற்றும் 'ரெரா' பதிவு போன்றவற்றை கவனமாக ஆராய வேண்டும். விலை குறைவு என்பதற்காக மட்டும் வீடு வாங்கக் கூடாது

சொந்த வீடு வாங்குகிறீர்களா? இதையெல்லாம் செய்யனும்

எறும்பு சேர்ப்பது சேமித்து, கொஞ்சம் ஹோம் லோன் போட்டு அழகான வீட்டை கட்டி அதன் முற்றத்தில் கயிற்று கட்டிலை போட்டு விட்டத்தை பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை யாராலும் அளவிடவே முடியாது. அப்படி வீடு கட்டும் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய விஷங்கள் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

நாம் தேர்வு செய்யும் பில்டர் எப்படி?

முதலில் நாம் சரியான பில்டரைத் தேர்வு செய்வது மிக முக்கியம். பில்டர் இதற்குமுன் கட்டிக் கொடுத்த வீடு களின் இன்றைய நிலை எப்படி இருக்கிறது என்பதை நேரில் சென்று பார்க்க வேண்டியது கட்டாயம். அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது நல்லது. இப்போதெல்லாம், பில்டர் பிரச்னை, வீடு கட்டுமானத்தில் பிரச்னை எனில், இணைய தளங்கள், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியாக்களில் புகார்களை் பறக்கவிடுகிறார்கள். எனவே, ஒருவர் நல்ல பில்டரா என்பதைக் கண்டுபிடிப்பது இன்றைக்கு சுலபமான விஷயமே

அடிப்படை வசதிகள் தேவை

இடம் கிடைக்கிறது என்பதற்காக நகரில் இருந்து தொலைதூரத்தில் வாங்க வேண்டியதில்லை. பிள்ளைகள் படிக்க நல்ல பள்ளிக்கூடம் இருக்கிறதா, போக்குவரத்து வசதி இருக்கிறதா, மருத்துவமனை வசதி இருக்கிறதா என பார்க்க வேண்டும். அருகே அடிப்படை வசிகள் இல்லையெனில், அதற்காக நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தீர விசாரிப்பது நன்று

வீடு வாங்கும் பல பேர் மனையோ, வீடோ என்ன விலை போகிறது என அக்கம்பக்கத்தில் விசாரிப்ப தில்லை. மனை வாங்கி வீடு கட்டி சென்ற பிறகு அல்லது கட்டிய வீட்டை வாங்கி குடியேறிய பிறகு, புரொமோட்டர் அல்லது பில்டர் என்னிடம் அதிக விலைக்கு இடம் அல்லது வீட்டை விற்று என்னை ஏமாற்றிவிட்டார் எனப் புகார் கூறுவதை வழக்கமாகப் பார்க்க முடிகிறது. விலைக் குறைவு என்பதை மட்டுமே வைத்து வீடு வாங்கும் முடிவை எடுக்காதீர்கள். சந்தை விலையைவிட மிகவும் குறைவான விலைக்கு ஒரு பில்டர் வீட்டை விற்கிறார் எனில், கண்ணில் விளக்கெண் ணெய் ஊற்றிக்கொண்டு பார்க்க வேண்டும்.

விலை குறைவு என்பதால் வாங்க வேண்டாம்

குறைந்த விலையில் வீட்டை விற்கிறார்கள் என்றால் அந்த இடத்தில் மனை என்ன விலை போகிறது, கட்டுமானச் செலவு எவ்வளவு, இந்த அளவுக்குக் குறைவான விலைக்கு வீட்டை எப்படி விற்க முடியும் என விசாரணை செய்ய வேண்டும். வீட்டின் கட்டுமானத் தரம் எப்படி இருக்கிறது என்பதை நல்ல பொறியாளரை வைத்துப் பரிசோதியுங்கள். விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகக் கண்ணை மூடிக் கொண்டு வீடு வாங்கினால், இழப்பு ஏற்படும்

குறைவான விலையில் கொடுப்பவர்தான் நல்ல பில்டர் என வேறு எதையும் கவனிக்காமல் வீடு வாங்குவது தவறு. உங்கள் அலுவலகத்திலிருந்து மிக அதிக தொலைவில் வீடு வாங்கினால் அலுவலகம் வந்துசெல்லும் நேரம் மற்றும் போக்குவரத்து செலவே பெரும் தொகையாக இருக்கும். இதற்குப் பதில், விலை அதிகம் என்றாலும் நகர்ப் புறத்தில் வாங்குவது நல்லது. போக்குவரத்துக்குச் செலவு செய்யும் தொகையைக் கொண்டு கூடுதல் இ.எம்.ஐ கட்ட முடியும்.

முதலீடா? வசிக்கவா?

வீடு வாங்கும் போது நாம் அதில் வசிக்க போகிறோமா இல்லை, வாடகைக்கு விட போகிறோமா என்பதை முடிவு செய்வது அவசியம். சிலர் நகரிலிருந்து 40 கி.மீ தொலைவில்தான் நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடு கிடைக்கிறது என வாங்கிவிடுகிறார்கள். ஆனால், அந்த வீடு அவர்கள் குடும்பத்துக்கு எந்த நன்மையும் தருவதில்லை. காரணம், நகருக்குள் வசித்துக்கொண்டு, இந்த வீட்டை வாடகைக்கு விடுவார்கள். வாடகை வருமானமும் பெரிதாக இருக்காது..

வாங்குவது ஒன்று கட்டுவது ஒன்று

நீங்கள் வாங்கப்போகும் வீட்டின் புராஜெக்டை ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமான ‘ரெரா’விடம் பதிவு செய்திருக் கிறார்களா, அதன் பதிவு எண் என்ன என்பதை அறிந்து, அதை ‘ரெரா’ வெப்சைட்டில் சரிபார்ப்பது அவசியம். பில்டர் சொல்லும் விவரங்களை ‘ரெரா’ இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என்பதைப் சரிபார்க்க வேண்டும். சில பில்டர்கள் ‘ரெரா’வில் சரியான விவரங்களைத் தந்து விட்டு, வீடு வாங்குபவர்களிடம் தவறான விவரங்களைச் சொல்வது நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் பத்தாவது மாடியில் வீடு வாங்குகிறீர்கள் எனில், எத்தனை மாடி வரைக்கும் அப்ரூவல் வாங்கி இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள். ஒரு வேளை, எட்டு மாடிக்குத்தான் அப்ரூவல் வாங்கியிருப்பார்கள். ஆனால், பத்து மாடி கட்டியிருப்பார்கள். இது போன்ற திட்டங்களில் வீடு வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

ஆவணங்களை சரிபார்ப்பது அவசியம்

ஆவணங்களின் உண்மைத் தன்மை மிக முக்கியம். வீடு கட்டுமானம், டிசைன், லொகேஷன் எல்லாம் அருமை யாக இருந்து, ஆவணங்களில் ஏதாவது பிரச்னை எனில், ஒட்டு மொத்தமாகப் பணமும் நிம்மதியும் போய்விடும். வீட்டின் பரப்பளவு, கார்பட் ஏரியா, பார்க்கிங் ஏரியா உள்ளிட்ட அளவீடுகளையும் அரசு அனுமதிகளையும் முறையாக சரிபார்த்து வீட்டை வாங்கினால் அதுதான் ஆனந்தம் விளையாடும் வீடு

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு