
கிரிப்டோகரன்சி முதலீடு - இவ்ளோ ரிக்ஸ் இருக்கா?
கிரிப்டோகரன்சி என்றால் என்பது குறித்து தெரியாமலேயே பலரும், அதில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். கிரிப்டோகரன்சி குறித்து அதிகம் தெரிந்து கொண்டு முதலீடு செய்தால் ஏமாற்றம் இருக்காது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். கிரிப்டோகரன்சிகளில் பிரபலமான பிட்காயினில் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு களில் 1,000 அமெரிக்க டாலர் போட்டிருந்தால், அதன் தற்போதைய மதிப்பு 3 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலராக இருக்குமாம். இது பங்குச் சந்தைகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தைவிட பல மடங்கு அதிகம் என்பதால் தகவல் தொழில்நுட்த்துறையில் கைநிறைய சம்பாதிக்கும் பலர் அதில் முதலீடு செய்வதாக கூறப்படுகிறது.
கட்டுப்பாடு இல்லாத முதலீடு
ஆனால் கிராப்டோ கரன்சி முதலீட்டில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாத காரணத்தால் மிகவும் ரிஸ்க் உடையதாகவே பார்க்கப்படுகிறது. பல கிரிப்டோகரன்சிகள், மோசடி நோக்கத்தோடு புற்றீசல் போல வந்து காணாமல் போயிருக்கின்றன எனவும் இவற்றில் பணம் போட்டவர்கள் முழு மூலதனத்தையும் இழந்திருக்கிறார்கள் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.
லாபமும் வரி விதிப்பும்
கிரிப்டோ சந்தையின் போக்கு நாம் எடுத்திருக்கும் வர்த்தகத்துக்கு எதிர்மறையாகப் போகும்போது செய்திருக்கும் மூலதனம் முழுவதும் சில நிமிடங்களில் காலியாகிவிடும் எனவும் இந்த ரிஸ்க் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் பலர் தமது முதலீட்டை இழக்கின்றனர் எனவும் சந்தை நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஒரு சிலர் கிரிப்டோகரன்சிகளில் லாபம் எடுத்தாலும், அதிக வரி விதிப்பு காரணமாகக் கூடுதல் பணத்தை அரசுக்குச் செலுத்த வேண்டும். கிரிப்டோகரன்சிகளில் வருமானப் படிநிலைகள் எதையும் கணக்கில் கொள்ளாமல் கிடைக்கும் லாபத்தில் இருந்து 30 சதவீதம் என்ற அளவில் வரி செலுத்த வேண்டும் என்ற ரகசியம் யாரும் அறியாதது.
பணம் போனால் திரும்பாது
பங்குச் சந்தைகளில் நஷ்டத்தைச் சந்தித்தால் அதை அந்த நிதியாண்டு மற்றும் அடுத்த ஆண்டுகளில் கிடைக்கும் லாபத்துடன் ஈடுகட்டும் வசதி உள்ள நிலையில்,
அது போன்ற நஷ்டத்தை அடுத்த ஆண்டுகளுக்கு கேரி ஃபார்வேர்டு செய்து கொள்ளும் வசதி கிரிப்டோகரன்சிகளில் கிடையாது என்பதை முதலீட்டாளர்கள் அறிவதில்லை.
முதலீட்டில் ரிஸ்க் வேண்டாம்
கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதற்கான தெளிவான வரையறை இல்லாததும் யூக வணிகத்தின் அடிப்படையிலும், மதிப்பு அடிப்படையிலுமே பெரும்பாலும் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் என்பதாலும் அதில் முதலீடு செய்வது பாதுகாப்பு கிடையாது என்கின்றனர் சந்தை நிபுணர்கள். கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு 1 சதவிகித டி.டி.எஸ், மற்றும் லாபத்துக்கு 30 சதவீத வரி விதிக்கப் பட்டிருப்பதால் பலரும் இதற்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்திருப்பதாகத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இரவு பகல் பாராமல் சிரமப்பட்டு சம்பாதித்து சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கூறகின்றனர்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.