Budget 2023:பட்ஜெட் 2023: பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்

By Pothy RajFirst Published Jan 31, 2023, 9:13 AM IST
Highlights

Budget 2023: Economic Survey: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜனவரி-31) தொடங்குகிறது. முதல்நாளில் இருஅவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

Budget 2023: Economic Survey:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(ஜனவரி-31) தொடங்குகிறது. முதல்நாளில் இருஅவைகளிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

பிப்ரவரி 1ம் தேதி(நாளை) 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக இன்று குடியரசுத் தலைவர் உரை முடிந்தபின், பட்ஜெட் தாக்கலுக்கான முன்மொழிவை நிதிஅமைச்சர் தாக்கல் செய்வார். அதன்பின் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்

பொருளாதார ஆய்வறிக்கையை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின், தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் பொருளாதார ஆய்வறிக்கை குறித்து விளக்கம் அளிப்பார். 

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன

பொருளாதார ஆய்வறிக்கை என்பது கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார மற்றும் நிதிச்சூழல்களை எடுத்துக் கூறுவதாகும். நாட்டில்உள்ள அனைத்து துறைகள் குறித்த புள்ளிவிவரங்கள், வேளாண்மை குறித்த நிலவரங்கள், போக்குகள், தொழில்துறை உற்பத்தி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, பணவீக்கம், அந்நியச் செலாவணி கையிருப்பு, உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து தெரிவிக்கப்படும். இதை பொருளாதார ஆலோசகர் ஊடகத்திடம் விளக்கம் அளிப்பார்

இந்தியாவின் எதிர்காலம் அதானி-யின் திட்டமிட்ட கொள்ளையால் தடுக்கப்படுகிறது: ஹிண்டன்பர்க் பதிலடி

பொருளாதார ஆய்வறிக்கை மூலம் கிடைக்கும் தகவல்களால் வளங்களை இன்னும் திறமையாக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய முடியும், அடுத்துவரக்கூடிய ஆண்டுக்கு இந்திய பொருளாதாரத்தை சிறப்பாக வழிநடத்த முன்னோட்டமாக அமையும். அது மட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக இருக்கும் விஷயங்களை ஆட்சியாளர்கள் அடையாளம் கண்டு கொள்ளவும் உதவியாக இருக்கும்.

எப்போது முதன்முதலாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது

பொருளாதார ஆய்வறிக்கை முதன்முதலாக கடந்த 1950-51ம் ஆண்டு முதன்முதலாக பட்ஜெட்டுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1964ம் ஆண்டிலிருந்து பட்ஜெட்டில் இருந்து பிரித்து, தனியாக பொருளாதார ஆய்வறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது.

கடைசியாக எப்போது தாக்கல் செய்யப்பட்டது?

பொருளாதார ஆய்வறிக்கை கடைசியாக கடந்த ஆண்டு தலைமைப் பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யாலால் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையின் கருத்துருவாக விரைவான அணுகுமுறை என்று தலைப்பிடப்பட்டது. கொரோனா பரவல்  பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்சி நிலைக்கு கொண்டுவருவதற்காகவும், சவால்களை முறியடிக்கவும் விரைந்து செயல்பட வேண்டும் என்று கருத்துரு வைக்கப்பட்டது. 

அதானி-க்கு ரூ.5.86 லட்சம் கோடி காலி! ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.11.60 லட்சம் கோடி அம்போ

கடந்த ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் 2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டது, 2022-23ம் ஆண்டில் 8 முதல் 8.5 % இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 
 

click me!