Adani share price: அதானி-க்கு ரூ.5.86 லட்சம் கோடி காலி! ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.11.60 லட்சம் கோடி அம்போ

By Pothy RajFirst Published Jan 30, 2023, 4:49 PM IST
Highlights

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட 32 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட 413 பக்க அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டுவிட்டது.

அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட 32 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட 413 பக்க அறிக்கையால் அதானி குழுமமே ஆட்டம் கண்டுவிட்டது.

கடந்த 3நாட்கள் வர்த்தகத்தில் மட்டும் அதானி குழுமத்துக்கு ஏறக்குறைய 7,200 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.5.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பில் 5-ல் ஒருபகுதி குறைந்துவிட்டது.

கவுதம் அதானிக்கு சவால் விடும் ஹிண்டன்பர்க் நிறுவனம்; யார் இதன் உரிமையாளர்?

அதுமட்டுமல்லாமல், உலககோடீஸ்வரர்கள் வரிசையில் 8-வது இடத்தில் இருந்த அதானி 9வது இடத்துக்குச் சரிந்துள்ளார். அதானியின் சொத்து மதிப்பு 85.70 பில்லியன் டாலர்களாகக் குறைந்து 9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.  

அதானி குழுமத்தில் உள்ள பெரும்பாலான பங்குகள் கடந்த ஆண்டு பங்குச்சந்தையில் சிறப்பாகச் செயல்பட்டு பங்குதாரர்களுக்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தன. ஆனால், இந்த ஆண்டு முதலீட்டாளர்களுக்கு கிலியை ஏற்படுத்திவிட்டன. 

இந்தியா மீதான திட்டமிட்ட தாக்குதல் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு:அதானி குழுமம் 413 பக்க பதிலடி

கடந்த இரு நாட்களில் மட்டும் அதானி குழுமத்தின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் சரிந்தது. இன்றைய வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஓரளவு சரிவிலிருந்து மீண்டன.

பங்குச்சந்தையில் பிற்பகல் நேர வர்த்தகத்தில் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனப் பங்குகள் மட்டுமே ஓரளவுக்கு மீட்சியில் இருந்தது. அதானி என்டர்பிரைசஸ் எப்பிஓ நாளையுடன் முடிகிறது. இந்த எப்பிஓ வெளியீட்டின் மூலம் ரூ.20ஆயிரம் கோடி திரட்ட அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. ஆனால், பிற்பகல் 2 மணிவரை 2 சதவீதம் மட்டுமே முதலீட்டாளர்கள் வந்துள்ளனர். 

ஆனால், மற்ற நிறுவனங்களான ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட் பங்குகளும் உயர்ந்தன. ஆனால், அதானி கிரீன், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன்,அதானி வில்மர் ,அதானி டோட்டல் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன. 

இந்தியாவின் எதிர்காலம் அதானி-யின் திட்டமிட்ட கொள்ளையால் தடுக்கப்படுகிறது: ஹிண்டன்பர்க் பதிலடி

இதற்கிடையே பங்குச்சந்தையில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.11.60 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.268.60 லட்சம் கோடியாகக் குறைந்துவிட்டது. பங்குச்சந்தையும் கடந்த 2 நாட்களில் 1400 புள்ளிகளை இழந்துவிட்டது.

அதிலும் நிப்டியில் வங்கித்துறை மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து கடந்த இரு நாட்களில் 2400 புள்ளிகள் குறைந்துள்ளன. 

click me!