Adani group share price : சர்ர்ர்ரென்று இறங்கிய அதானி குழுமத்தின் பங்குகள்; முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!!

By Dhanalakshmi GFirst Published Jan 30, 2023, 1:42 PM IST
Highlights

அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இன்று மும்பை பங்குச் சந்தையில் பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. 

அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் அதானி டோட்டல் காஸ், அதானி டிரான்மிஸ்சன், அதானி கிரீன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு இன்று மட்டும் சுமார் 20 சதவீதம் சரிந்தது. அதானி வில்மர், அதானி பவர் 5 சதவீதம் சரிந்துள்ளது. அதானி டோட்டல் காஸ் மற்றும் அதானி கிரீன் ஆகிய பங்குகள் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளன. அதானி டிரான்மிஸ்சன் பங்குகளின் மதிப்பு கடந்த 52 வாரங்களுக்குப் பின்னர் ஒரு பங்கின் மதிப்பு ரூ. 1,611 என்ற அளவில் இறங்கி காணப்படுகிறது. அதானி வில்மர் மற்றும் அதானி பவர் பங்குகளின் மதிப்பும் கடந்த ஆறு மாதங்களுக்குப் பின்னர் சரிவைக் கண்டுள்ளன.

அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனங்களான அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் இன்று காலை 11 மணி வர்த்தக்கத்தில், 10 சதவீத உயர்வைக் கண்டன. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் இவற்றில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கின் மதிப்பு மட்டும் சுமார் 3 சதவீத உயர்வை பெற்று இருந்தது. அதானி போர்ட்ஸ் பங்கின் மதிப்பு சரிந்தது.

Adani Hindenburg:இந்தியாவின் எதிர்காலம் அதானி-யின் திட்டமிட்ட கொள்ளையால் தடுக்கப்படுகிறது: ஹிண்டன்பர்க் பதிலடி

ஆசியாவின் பணக்காரரான கவுதம் அதானி நிறுவனங்களின் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் மோசடி குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தது. அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தது. ஆனால், இதை திட்டவட்டமாக அதானி குழுமம் மறுத்துள்ளது. அதானி குழுமம் அளித்து இருந்த பதிலில், ''இந்தியா, அதன் நிறுவனங்கள் மற்றும் வளர்ச்சியின் மீது "கட்டமைக்கப்பட்ட தாக்குதல்" இது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் "பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அமெரிக்க நிறுவனங்கள் நிதி ஆதாரங்களைப் பெறும் நோக்கத்தில் விஷயங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

"இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தேவையற்ற தாக்குதல் மட்டும் இல்லை. இந்தியா மற்றும் இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம், வளர்ச்சி மற்றும் லட்சியம் ஆகியவற்றின் மீதான கணக்கிடப்பட்ட தாக்குதல்" என்றும் குறிப்பிட்டு இருந்தது.

Gold Silver price Today: தங்கம் விலையில் நடுத்தரக் குடும்பத்தினருக்கு ஷாக் இல்லை! இன்றைய நிலவரம் என்ன?

ஆனால், ஹிண்டன்பர்க் வெளியிட்டு இருந்த அறிக்கையில், ''அதானி குழுமத்திடம் 88 குறிப்பிட்ட கேள்விகளைக் கேட்டு இருந்தோம். இவற்றில் 62 கேள்விகளுக்கு பதில் அளிக்க அதானி குழுமம் தவறிவிட்டது. அதற்கு பதிலாக, முக்கிய கேள்விகளை தொகுத்து மொத்தமாக பதில் அளித்து இருந்தது'' என்று தெரிவித்து இருந்தது. 

அதானி குழுமத்தின் பங்குகள் கடந்த வாரம் புதன்கிழமையில் இருந்தே, அதாவது ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிடப்பட்டதில் இருந்து  இறங்குமுகமாக இருக்கின்றன. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை  புதன் மற்றும் வெள்ளிக்கிழமை (இன்ட்ராடே வர்த்தகத்தில்) 23% வரை சரிந்தன. மேலும் இந்தக் குழுமத்தின் சந்தை மூலதனம் ரூ.4.2 லட்சம் கோடிகள் சரிந்தது.

click me!