Union Budget 2023 on business sector:MSME:சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன சலுகை?

By Pothy RajFirst Published Feb 1, 2023, 2:21 PM IST
Highlights

Union Budget 2023 on business sector:2023-24ம் நிதியாண்டுக்கான ம்த்திய பட்ஜெட்டில் நாட்டின் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

Union Budget 2023 on business sector: 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நாட்டின் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2023 உரையில் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அறிவிப்பில் கூறியதாவது:

சுகாதாரத்திற்கு மத்திய பட்ஜெட்டில் சலுகை; சிறப்பு திட்டங்கள் அறிவிப்பு!!

  • சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களின் ஆவணங்களை சேமிப்பு மற்றும் டிஜிட்டல் மயத்துக்காக டிஜிலாக்கர் வசதி உருவாக்கப்படும்.
  • இதன் மூலம் சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் டிஜிட்டல் ஆவணங்களை விரைவாக பரிசீலிக்க முடியும்
  • சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதத் திட்டத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.9ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஏப்ரல் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும்.
  • சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும்போது, கடன்பெறுவதும், விண்ணப்பிப்பதும் எளிதாகும். 
  • பெரிய வர்த்தக நிறுவனங்கள், தொண்டுநிறுவன அறக்கட்டளைகளுக்கும் டிஜிலாக்கர் தளத்தை பயன்படுத்தலாம். ஆன்லைனில் தங்களின் ஆவணங்களை பகிரலாம்.
  • குறிப்பிட்ட அரசு நிறுவனங்களின் அனைத்து டிஜிட்டல் அமைப்புகளுக்கும்  பொதுவான அடையாள ஆவணமாக பான் கார்டு எடுத்துக்கொள்ளப்படும்
  • சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு வரும் நிதியாண்டில் ரூ. 2 லட்சம் கோடி கூடுதல் பிணையம் இல்லாத உத்தரவாதக் கடன் வழங்கப்படும் 
  • ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை விற்றுமுதல் உள்ள குறு நிறுவனங்களும், ரூ.50 லட்சம் வரை விற்றுமுதல் கொண்ட சில தொழில் வல்லுநர்களும் அனுமான வரி விதிப்பின் பலனைப் பெறுவதாக இருந்தது.
  • இது பட்ஜெட்டில் குறுநிறுவனங்களுக்கு ரூ.3 கோடியும், தொழில்வல்லுநர்களுக்கு ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வரவு செலவு கணக்குகளை  பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 
  • 2024,மார்ச் 31ம் தேதிவரை உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடங்கும் புதிய கூட்டுறவு நிறுவனங்கள், தற்போது கிடைக்கும் 15% குறைந்த வரி விகிதத்தின் பலனைப் பெறும்

ரயில்வேக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ரூ. 2.40 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு!

இவ்வாறு மத்திய பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

click me!