
பி.எம்.டபிள்.யூ. மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது R 1250 RT மாடலுக்கான முன்பதிவுகளை துவங்கி இருக்கிறது. இந்தியாவில் இந்த மாடல் மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய பி.எம்.டபிள்.யூ. R 1250 RT மாடலுக்கான முன்பதிவு பி.எம்.டபிள்.யூ. அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இத்துடன் பிரத்யேக நிதி சலுகைகை பி.எம்.டபிள்.யூ. தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் பி.எம்.டபிள்.யூ. R 1250 RT விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் யூரோ 5 புகை விதிகளுக்கு பொருந்தும் 1254சிசி, பாக்சர் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பி.எம்.டபிள்.யூ. ஷிஃப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. திறன், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய பி.எம்.டபிள்.யூ. R 1250 RT மாடிலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், ப்ளூடூத் வசதி கொண்ட 10.25 இன்ச் ஃபுல் கலர் TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மூன்று வித ரைடு மோட்கள், ABS ப்ரோ, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், குரூயிஸ் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர ரேடார் சார்ந்த ஆக்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ரைடிங் மோட்ஸ் ப்ரோ, புதிய என்ஜின் டிராக் டார்க் கண்ட்ரோல், எலெக்டிரானிக் சஸ்பென்ஷன், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் மற்றும் அடாப்டிவ் டர்னிங் லைட் உள்ளிட்டவை ஆப்ஷனல் எக்ஸ்டிரா பட்டியலில் வழங்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.