BMW iX EV price : முழு சார்ஜ் செய்தால் 426 கி.மீ. செல்லும் கார் - பி.எம்.டபிள்யூ. அசத்தல்

By Nandhini SubramanianFirst Published Jan 20, 2022, 4:25 PM IST
Highlights

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் iX எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. 

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட iX எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியிட்டது. புதிய எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் 426 கிலோ மீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. பி.எம்.டபிள்யூ. தனது iX எலெக்ட்ரிக் கார் மாடல் விலையை ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்தியாவில் பி.எம்.டபிள்யூ. iX மாடல் விலை ரூ. 1.16 கோடி, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய iX மாடலை சார்ஜ் செய்ய பி.எம்.டபிள்யூ. 150 kW DC ஃபாஸ்ட் சார்ஜரை வழங்குகிறது. இதை கொண்டு 31 நிமிடங்களில் காரை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துவிட முடியும். இதன் மூலம் கார் 95 கிலோ மீட்டர் வரை செல்லும். இதுதவிர 50 kW DC சார்ஜர் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 71 நிமிடங்கள் ஆகும். AC சார்ஜர் கொண்டு பி.எம்.டபிள்யூ. iX மாடலை முழுமையாக சார்ஜ் செய்ய ஏழு மணி நேரம் ஆகும்.

புதிய பி.எம்.டபிள்யூ. iX மாடலில் டூயல் பீம் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இண்டகிரேடெட் எல்.இ.டி.  டே டைம் ரன்னிங் லைட்கள், பெரிய கிட்னி கிரில், ஸ்கல்ப்டெட் பம்ப்பர், 3டி பொனெட் வழங்கப்பட்டுள்ளது. பக்கவாட்டில் பெரிய அலாய் வீல்கள், ஃபிளேர்டு ஷோல்டர், செவ்வக வீல் ஆர்ச்கள், ஃபிரேம்லெஸ் விண்டோ, பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள் உள்ளன.

உள்புறம் 9 இன்ச் வளைந்த கிளாஸ் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஹெக்சகோனல் வடிவம் கொண்ட ஸ்டீரிங் வீல், பானரோமிக் சன்ரூஃப், மசாஜ் வசதி கொண்ட மல்டி-ஃபன்ஷன் சீட்கள், ஆம்பியண்ட் லைட்டிங், 18 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சரவுண்ட் சவுண்ட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

பி.எம்.டபிள்யூ. iX மாடலின் ஆக்சில்களில் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இரண்டு லித்தியம் அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகின்றன. இந்த எஸ்.யு.வி. மாடல் 326 பி.ஹெச்.பி. திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6.1 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் பெர்சனல், ஸ்போர்ட் மற்றும் எஃபிஷியண்ட் என  மூன்று டிரைவிங் மோட்கள் உள்ளன.

click me!