பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு மதிப்பு இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.260.20க்கு விற்கப்படுகிறது.
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு மதிப்பு இன்று மும்பைப் பங்குச்சந்தையில் 6 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கு ரூ.260.20க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் முடிந்த காலாண்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 431.49 கோடி லாபம் ஈட்டியது. அதிகமான வருவாய் ஈட்டியதைத் தொடர்ந்து காலை முதல் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகளை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.
2022ம் ஆண்டு ஏப்ரல் 19ம தேதி பெல் நிறுவனத்தின் பங்கு 52 வாரங்களில் இல்லாத அளவு ஒரு பங்கு மதிப்பு ரூ.259.50க்கு உயர்ந்தது. இந்நிலையில் முதல் காலாண்டில் லாபம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்கு மதிப்பு 5 சதவீதம் இன்று காலை வர்த்தகத்தில் உயர்ந்தது.
2022-23்ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.3064 கோடி விற்றுமுதல் ஈட்டியது. இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டைவிட 96 சதவீதம் அதிகமாகும். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அளவைவிட பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது,வருமானமும் அதிகரித்துள்ளது என்று பங்கு தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த நிதியாண்டு முதல் காலாண்டை விட நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், ரூ.3,140 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ24.41 கோடி லாபம் ஈட்டிய நிலையில், நடப்பு நிதியாண்டில் ரூ.366 கோடி லாபம் ஈட்டியுள்ளது.