budget 2023-24: நிதி அமைச்சகம் சுறுசுறுப்பு ! 2023-24ம் ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்டோபரில் தொடக்கம்

By Pothy RajFirst Published Sep 8, 2022, 1:01 PM IST
Highlights

2023-24ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் தயாரிப்பு பணிகளை மத்திய நிதி அமைச்சகம் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்குகிறது. 

2023-24ம் நிதியாண்டுக்கான பொதுபட்ஜெட் தயாரிப்பு பணிகளை மத்திய நிதி அமைச்சகம் வரும் அக்டோபர் 10ம் தேதி தொடங்குகிறது. 

இந்தியப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது, வளர்ச்சி அடைந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை வரும் என்றஅச்சம் ஆகியவற்றுக்கு இடையே பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.

அமித் ஷா பாதுகாப்பில் அத்துமீறல்: மும்பையில் ஒருவர் கைது: போலீஸார் விசாரணை

அதுமட்டுமல்லாமல் நாட்டில் நிலவும் பணவீக்கம், வேலையின்மை பிரச்சினை, வேலைவாய்ப்பு உருவாக்கம், தேவையை ஊக்கப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சியை 8% உயர்த்துதல் ஆகியவை பட்ஜெட் தயாரிப்பில் முக்கியமாக கவனம் பெறும்.

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில் “ பணவீக்கத்துக்கு அதிகமாக அரசு முன்னுரிமை அளிக்காது. வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்துதலுக்குதான் முக்கியத்துவம்.பணவீக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்காதது வியப்பாக இருக்கலாம், ஆனால், கடந்த 2 மாதங்களாக பணவீக்கம் கட்டுப்படுத்தும் அளவில்தான் இருக்கிறது ”எனத் தெரிவித்தார்.

மாட்டுக்கறி சாப்பிட்டா தப்பு இல்லையா.? ரன்பீர் ஆலியாபட்டை கோவிலுக்குள் விடாமல் விரட்டிய விஷ்ய இந்து பரிஷத்.

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக  பதவி ஏற்று 5வது பட்ஜெட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் தாக்கல் செய்யஇருக்கிறது. நிர்மலா சீதாராமன் தனது முழுமையான, கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அதன்பின் 2024ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் மக்களவைத் தேர்தல் வந்துவிடும் என்பதால், அவரின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும்.

மத்திய நிதிஅமைச்சகத்தின்கீழ் வரும் பொருளாதார விவகாரத்துறை  விடுத்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது “ பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டம் செலவினத்துக்கான செயலாளர் தலைமையில் அக்டோபர் 10, 2022 நடக்கும். நிதிஅமைச்சக ஆலோசகர்கள் முறைப்படி தேவையான ஆவணங்களுடன் கூட்டத்தில் பங்கேற்கலாம். புள்ளிவிவரங்களைஆய்வு செய்வதற்கு ஏற்றார்போல் ஹார்டுகாப்பி விவரங்களையும் கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் முடிந்தபின் பட்ஜெட் கூட்டம் உறுதியாகிவிடும். திருத்தப்பட்ட மதிப்பீடு அறிக்கையின் கூட்டம் நவம்பர் மாத நடுப்பகுதியில் நடக்கும்.  பட்ஜெட் பெரும்பாலும் பிப்ரபரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும். பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல்பகுதிக் கூட்டம் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும். 

மிரட்டும் மழை! பெங்களூருவுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை: இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் முயற்சி

நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளரச்சி 7 முதல் 7.5% வளர்ச்சி பெறும் எனமதிப்பிடப்பட்டுள்ளது. ஜிடிபியில் நிதிப்பற்றாக்குறை 6.4% இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!