வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்... அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..!

Published : Oct 01, 2019, 05:00 PM IST
வங்கிகள் இயங்கும் நேரம் அதிரடி மாற்றம்...  அமலுக்கு வந்தது புதிய அறிவிப்பு..!

சுருக்கம்

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணி நேரத்தை மாற்றி அமைத்து கால அட்டவணையை  நிதிச்சேவை துறை அறித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் பணி நேரத்தை மாற்றி அமைத்து கால அட்டவணையை  நிதிச்சேவை துறை அறித்துள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள பல பொதுத்துறை வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டன. இதனால் இந்த வங்கிகள் அனைத்திற்கும் பணி நேரம் பொதுவாக்கப்பட்டு உள்ளது. முன்னதாக பல வங்கிகள் காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் தங்களது வசதிக்கேற்ப பணி நேரத்தை கடைபிடித்து வந்தன. இதனால், பொதுத்துறை வங்கிகள் அனைத்திற்கும் பொதுவான வேலை நேரத்தை நிதிச்சேவை துறை கொண்டு வந்துள்ளது. இது இன்று முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அமலாக்கப்பட்டுள்ள புதிய நேர முறையின் அடிப்படையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணியுடன் பணி நேரம் முடிவடைகிறது. உணவு இடைவேளை மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் நாகலாந்து மாநிலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை எனவும், மத்தியப்பிரதேசத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் இயக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மனைவிக்கு பணம் கொடுத்தால் பிரச்சனையா.? வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்
SBI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்! யோனோ 2.0 செயலி அறிமுகம்!