
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை மக்களுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் வழங்க மத்திய அரசு வழிவகை செய்துள்ளது.
கிராமங்கள் அதிகம் நிறைந்த நாடு இந்தியா என்பது அனைவருக்கும் தெரியும்.அதே கிராமத்தில் தான் அதிக மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.இவர்கள் அவசர தேவை என்றாலும் தங்களிடம் உள்ள நகைகளையோ அல்லது நில பத்திரங்கள் வைத்தோ தான் வங்கியில் கடன் பெறுவார்கள். அவ்வாறு கடன் பெற்றாலும் அதிக சதவிகித வட்டியில் விவாசய கடன் கிடைக்கும் அதுவும் 1 லட்சம் வரைதான். இது மக்களுக்கு நல்ல பயன்தரக் கூடியதாக இருந்தாலும், தற்போது மத்திய அரசு மேலும் ஒருநல்ல சிறப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
அதன் படி, வறுமையில் வாடும் 8.5 கோடி மக்களும் பயன் பெரும் வகையில், ஒரு குடும்பத்திற்கு ஒரு வாய்ப்பு என்ற அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக ஆண்டிற்கு ரூ.60,000 கோடி செலவு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தகவலை கிராம வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.