
காசோலை மூலம் இனி பணம் செலுத்தினால் கட்டணம் வசூலிக்கப்படும் என எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது எஸ்பிஐ வங்கியின் கூட்டு நிருவனம் தான் எஸ்பிஐ கார்டு. இந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் 5௦ கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது.
1௦௦ ரூபாய் வசூல்
ரூ.2000-க்கு குறைவான பணத்தை காசோலை மூலம் செலுத்தினால் ரூ.100 வசூலிக்கப்படும் என ஏற்கனவே எஸ்பிஐ கார்டு நிறுவனம் தெரிவித்து இருந்தது. பெரும்பாலான வாடிக்கையாளர்களில் 92% வாடிக்கைகையாளர்கள் காசோலை இல்லா பணப்பரிவர்த்தனையைய(டிஜிட்டல் பரிவர்த்தனை) மேற்கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
குறிப்பு :
காசோலை மூலம் பணம் செலுத்துபவர்களில் 8 சதவீதம் பேரில், 6 சதவீதம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை தான் காசோலையாக செலுத்துகின்றனர்.
எனவே இதில் 2 சதவீதம் மக்கள் மட்டும் தான் 2 ஆயிரத்திற்கும் குறைவான பணத்தை காசோலை மூலம் செலுத்துகின்றனர். இவர்கள் மட்டுமே 1௦௦ ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
இந்த அபராத தொகை எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வரும் காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை தான், மக்களால் முழுமையாக பயன்படுத்தும் நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.