Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

Published : Jul 28, 2023, 08:31 AM IST
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!

சுருக்கம்

சுதந்திர தினம், திருவோணம் என ஆகஸ்ட் மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன் முழுமையான விவரங்களை பார்க்கலாம்.

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விடுமுறை காலண்டர், ஆகஸ்ட் 2023ல் ஞாயிறுகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்டில், எட்டு மாநில குறிப்பிட்ட விடுமுறைகள் இருக்கும்.

ஒரு சில மாநிலங்களில், டெண்டாங் லோ ரம் ஃபத், பார்சி புத்தாண்டு, ஓணம், ரக்ஷா பந்தன் மற்றும் பிற சிறப்பு நாட்களில் பொது மற்றும் வணிக வங்கிகள் மூடப்படும். ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்குச் செல்ல விரும்பினால், வாடிக்கையாளர்கள் தங்கள் நாட்களை சரியாகத் திட்டமிட வேண்டும்.

ஆகஸ்ட் 8: டெண்டாங் லோ ரம் ஃபாட் (கேங்டாக்கில் வங்கி இல்லை)
ஆகஸ்ட் 12: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 13: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டேராடூன், காங்டாக், குவாஹாத்தி, ஹைதராபாத் - ஆந்திரா, ஹைதராபாத் - தெலுங்கானா, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். கான்பூர், கொச்சி, கோஹிமா, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது தில்லி, பனாஜி, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் சுதந்திர தினத்திற்காக)
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (பார்சி புத்தாண்டை கொண்டாட பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 18: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி (ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு கவுகாத்தியில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 20: மூன்றாவது ஞாயிறு
ஆகஸ்ட் 26: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 27: மாதத்தின் நான்காவது ஞாயிறு
ஆகஸ்ட் 28: முதல் ஓணம் (முதல் ஓணம் கொண்டாடுவதற்காக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்)
ஆகஸ்ட் 29: திருவோணம் (திருவோணத்தை கொண்டாடுவதற்காக கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் 30: ரக்ஷா பந்தன் - ரக்ஷா பந்தன் காரணமாக ஜெய்ப்பூர் மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றங்கள்.. சிலிண்டர் விலை முதல் வங்கி விடுமுறை வரை - முழு விபரம் இதோ !!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு