5 வருட தொடர் வைப்புநிதி டெபாசிட்டுகள் மீதான வட்டி மட்டும் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் ரெப்போ விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில், பொது வருங்கால வைப்புநிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டங்கள், செல்வமகள் திட்டம், மற்றும் தபால் அலுவலக வைப்புத்தொகை உள்ளிட்ட பெரும்பாலான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் பெரிதாக மாற்றப்படாமல் உள்ளன.
5 வருட தொடர் வைப்புநிதி டெபாசிட்டுகள் மீதான வட்டி மட்டும் 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.5 சதவீதத்தில் இருந்து 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
"2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அக்டோபர் 1, 2023 முதல் தொடங்கி டிசம்பர் 31, 2023 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளன” என்று நிதி அமைச்சகம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
பான் கார்டு தொலைந்துவிட்டதா? உடனே புதிய பான் கார்டு வாங்குவது ரொம்ப ஈசி தான்!
அக்டோபர்-டிசம்பர் 2023க்கான சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் விவரம்:
சேமிப்புக் கணக்கு வட்டி: 4 சதவீதம்
1-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் வட்டி: 6.9 சதவீதம்
2-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் வட்டி: 7.0 சதவீதம்
3-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் வட்டி: 7 சதவீதம்
5-ஆண்டு போஸ்ட் ஆபிஸ் டெபாசிட் வட்டி: 7.5 சதவீதம்
5 ஆண்டு தொடர் வைப்புத்தொகை வட்டி: 6.7 சதவீதம்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) வட்டி: 7.7 சதவீதம்
கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி: 7.5 சதவீதம் (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
பொது வருங்கால வைப்புநிதி (PPF) வட்டி: 7.1 சதவீதம்
சுகன்யா சம்ரித்தி (செல்வ மகள்) கணக்கு வட்டி: 8.0 சதவீதம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட வட்டி: 8.2 சதவீதம்
மாத வருமானக் கணக்கு வட்டி: 7.4 சதவீதம்.
இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான அம்பேத்கர் சிலை; அமெரிக்காவில் அக். 14ஆம் தேதி திறக்க ஏற்பாடு
வங்கிகளில் நிரந்தர வைப்புநிதி திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள்:
ஹெச்டிஎஃப்சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட் செய்பவரின் வயதைப் பொறுத்து, ரூ.2 கோடிக்கும் குறைவான நிரந்தர வைப்புநிதிகளுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி நிரந்தர வைப்புநிதியில் ஆண்டுக்கு 7.60 சதவீதம் வரை வட்டிவிகிதங்களை வழங்குகிறது. பிஎன்பி வங்கி ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை வழங்குகிறது. ஸ்டேட் வங்கி ஆண்டுக்கு 7.50 சதவீதம் வரை நிரந்தர வட்டிவிகிதங்களை வழங்குகிறது.
இந்தியாவில் தற்போதைய பணவீக்க விகிதம்:
ஆகஸ்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் வரம்பைத் தாண்டி 6.83 சதவீதமாக இருந்தது. ஜூலையில் 7.44 சதவீதம் என்ற உச்சமான எட்டிய நிலையில், தற்போது கணிசமாகக் குறைவாக இருக்கிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் அதிக உணவுப் பணவீக்கம் ஆகியவை இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
கூகுள் பிக்சல் 8 மொபைல் இன்று ரிலீஸ்; ட்ரெண்டை மாற்றப்போகும் வெப்பநிலை சென்சார்!