உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டல்.. அதுவும் அயோத்தியில்.. உணவு பிரியர்களுக்கு செம விருந்து காத்திருக்கு!!

By Raghupati R  |  First Published Jan 19, 2024, 10:14 AM IST

ஜனவரி 22 அன்று ராமர் கோயில் திறக்கப்பட்ட பிறகு அயோத்தியில் பெரிய ஹோட்டல் அதிபர்களும் ரியல் எஸ்டேட் அதிபர்களும் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை நிறுவ ஆர்வமாக உள்ளனர். இப்போது உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டலை அயோத்தியில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.


அயோத்தியில் இம்மாதம் 22ம் தேதி ராமர் மந்திரா திறப்பு விழாவை அடுத்து, அயோத்தியில் ஆதிக்கம் செலுத்த பெரும் ஓட்டல்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போது உலகின் முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டலை அயோத்தியில் கட்டுவதற்கான திட்டம் உள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழா அயோத்தி நகரத்தில் தொடர்ச்சியான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கியது. கடந்த காலங்களில் அயோத்தி ஸ்மார்ட் சிட்டியாக உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகின. இப்போது ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் அயோத்தியை ஒரு பெரிய வணிக மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Tap to resize

Latest Videos

சைவ உணவுகளை மட்டும் வழங்கும் 7 நட்சத்திர ஹோட்டல் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே இல்லை. ஆனால் இந்த 7 நட்சத்திர ஹோட்டல் அயோத்தியில் கட்டப்பட்டால் அதுவே முதல் சைவ 7 நட்சத்திர ஹோட்டலாக இருக்கும். தவிர, சரயு நதிக்கரையில் பல ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் வருகின்றன.

அயோத்தியில் ஹோட்டல் அமைக்க சுமார் 110 சிறிய மற்றும் பெரிய ஓட்டல் அதிபர்கள் நிலம் வாங்கியுள்ளனர். மும்பை, டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய விமான நிலையம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் ஆகியவை ஏற்கனவே நகரத்தில் இயங்கி வருகின்றன.

வெள்ளிக்கிழமை முதல் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டர் சேவையும் தொடங்கும். இங்கு சோலார் பூங்காவும் கட்டப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஏற்கனவே இந்த கோவிலில் இருந்து 15 நிமிட தூரத்தில் உள்ள 'தி சரயு' என்ற ஆடம்பரமான எக்ஸ்கிளேவில் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் ராமர் கோவில் கட்டினால் அயோத்தியின் தோற்றம் முற்றிலும் மாறும் என்பதே நிதர்சனம்.

மாலத்தீவை விடுங்க பாஸ்.. நம்ம அந்தமானை கம்மி விலையில் சுற்றி பாருங்க! டிக்கெட் விலை கம்மிதான்!

click me!