மத்திய பட்ஜெட்டில் இத்தனை விஷயம் இருக்கா? சாமானியருக்கும் தெரியவேண்டிய சுவாரஸ்ய தகவல்கள்!

By SG Balan  |  First Published Jan 18, 2024, 12:24 PM IST

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், மத்திய பட்ஜெட் பற்றிய வரலாற்றுத் தகவல்களை அறிந்துகொள்ளலாம்.


பிப்ரவரி 1, 2024 அன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது 2019ஆம் ஆண்டிலிருந்து அவர் தாக்கல் செய்யும் ஆறாவது பட்ஜெட் ஆகும். இந்த இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன், முந்தைய மத்திய பட்ஜெட்களைப் பற்றிய அதிகம் அறியப்படாத தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

1. இந்தியாவில் முதல் மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டது?

Tap to resize

Latest Videos

ஏப்ரல் 7, 1860 இல் இந்தியாவில் முதல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் பொருளாதார வல்லுநரும் அரசியல்வாதியுமான ஜேம்ஸ் வில்சனால் அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று அப்போதைய மத்்தி யயநிதி அமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது.

2. பட்ஜெட் அச்சிடுதல்

பட்ஜெட் அச்சிடும் இடம் பல ஆண்டுகளாக மாறிவருகிறது. 1950 வரை ராஷ்டிரபதி பவனில் பட்ஜெட் அச்சிடப்பட்டது. அங்கே அச்சான பட்ஜெட் கசிந்ததன் காரணமாக, அச்சிடும் இடத்தை டெல்லியின் மின்டோ சாலையில் உள்ள அச்சகத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது. 1980ஆம் ஆண்டில், நார்த் பிளாக்கில் ஒரு அரசாங்க அச்சகம் நிறுவப்பட்டது. இது நிதி அமைச்சகத்தின் தலைமையகமாக செயல்படுகிறது.

அதிக அளவு தங்கம் இருப்பு வைத்திருக்கும் டாப் 10 நாடுகள் எவை? இந்தியாவுக்கு எந்த இடம்?

3. மிக நீளமான பட்ஜெட்

பிப்ரவரி 1, 2020 அன்று மத்திய பட்ஜெட் 2020–21 தாக்கல் செய்தபோது நிர்மலா சீதாராமன் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அந்தச் பட்ஜெட் உரையின்போது நிதி அமைச்சர் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசினார்.

4. பட்ஜெட் உரையில் அதிகபட்ச வார்த்தைகள்

1991இல் நரசிம்மராவ் அரசாங்கத்தின் போது, மன்மோகன் சிங் 18,650 வார்த்தைகளைக் கொண்ட பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதுவே வார்த்தை எண்ணிக்கையின் அடிப்படையில் மிக நீண்ட பட்ஜெட் உரை ஆகும். 2018ஆம் ஆண்டில், வார்த்தை எண்ணிக்கையில் இரண்டாவது நீண்ட உரையை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வழங்கினார். மொத்தம் 18,604 வார்த்தைகள் கொண்ட அந்த உரையை ஜெட்லி 1 மணி நேரம் 49 நிமிடங்களில் வாசித்தார்.

5. இந்தியாவில் மிகக் குறுகிய பட்ஜெட் உரை

1977 இல் அப்போதைய நிதி அமைச்சர் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் வாசித்ததுதான் இந்தியாவின் மிகக் குறுகிய பட்ஜெட் உரை. அந்த உரை வெறும் 800 வார்த்தைகள் மட்டுமே கொண்டிருந்தது.

6. அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தவர் யார்?

இந்தியாவில் அதிக முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த பெருமை முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குச் சொந்தமானது. 1962 முதல் 1969 வரை நிதியமைச்சராக இருந்தபோது, மொரார்ஜி தேசாய் மொத்தம் 10 பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்தார். ப. சிதம்பரம் (9), பிரணாப் முகர்ஜி (8), யஷ்வந்த் சின்ஹா (8), மன்மோகன் சிங் (6) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

7. பட்ஜெட் தாக்கல் நேரம்

1999ஆம் ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தின் நடைமுறையைப் பின்பற்றி பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் மாலை 5 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 1999ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அதனை காலை 11 மணியாக மாற்றினார்.

2017ஆம் ஆண்டில், பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளுக்குப் பதிலாக பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையை அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தொடங்கி வைத்தார்.

8. பட்ஜெட் ஆவணங்களில் பயன்படுத்தப்படும் மொழி

பட்ஜெட் ஆவணங்களை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. இந்த முடிவுக்கு முன், மத்திய பட்ஜெட் 1955 வரை ஆங்கிலத்தில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது.

9. காகிதம் இல்லா பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக 2021-22ஆம் ஆண்டில்தான் காகிதமில்லா மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக காகிதமில்லாத பட்ஜெட் தாக்கல் நடத்தப்பட்டது.

10. இந்தியாவில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண்

1971ஆம் ஆண்டில், இந்தியப் பிரதமர் மற்றும் நிதியமைச்சராகப் பணியாற்றிய இந்திரா காந்தி, நாட்டில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். இவருக்குப் பின் 2019ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் தனது முதல் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

அந்த ஆண்டில், நிர்மலா சீதாராமன் வழக்கமான பட்ஜெட் சூட்கேசுக்குப் பதிலாக தேசிய சின்னத்துடன் அலங்கரிக்கப்பட்ட பாரம்பரிய 'பாஹி-கட்டா' பையில் பட்ஜெட் கோப்புகளை எடுத்துச் சென்றார்.

ஆந்திராவில் உலகின் மிக உயரமான அம்பேத்கர் சிலை: முதல்வர் ஜெகன் நாளை திறந்து வைக்கிறார்

click me!