ரூ. 2000 நோட்டை வங்கியில் மாற்ற போறீங்களா? எந்தெந்த வங்கியில் என்னென்ன விதிகள்? தெரிந்து கொள்ளுங்கள்

By Ramya sFirst Published May 25, 2023, 7:55 PM IST
Highlights

ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த வாரம் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது, ஆனால் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யவும் அல்லது வங்கிகளில் மாற்றவும் செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது.  ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி செல்லுபடியாகும் அடையாள அட்டைகளை வழங்குவதையோ அல்லது வைப்புப் படிவங்களை நிரப்புவதையோ கட்டாயமாக்கவில்லை என்றாலும், ஆதாரமாக அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை வங்கிகள் கோருவதாக சில இடங்களில் புகார்கள் வந்தன.

இதையும் படிங்க : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா... எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன? இதோ முழு விவரம்!!

சில வங்கிகள் மின்னணு பதிவு மூலம் நோட்டுகளை மாற்றிக்கொண்டன, இன்னும் சில வங்கிகள் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எந்த அடையாளச் சான்றிதழும் கொடுக்காமல் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யும்படி வாடிக்கையாளர்களிடம் கேட்டு வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது படிவம் அல்லது அடையாளச் சான்று தேவையில்லை என்று தனது கிளைகளுக்கு அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே போல் 2000 ரூபாய் நோட்டை மாற்றுவதற்கு ஆதார் அட்டை அல்லது அதிகாரப்பூர்வ சரிபார்க்கப்பட்ட ஆவணங்கள் (OVD) தேவையில்லை என்று PNB தெரிவித்துள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் அதற்கான எந்தப் படிவத்தையும் நிரப்ப வேண்டியதில்லை. 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கூடுதல் தனிப்பட்ட தகவல்களைக் கோரி பழைய படிவங்கள் ஆன்லைனில் பரவியதை தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கோடக் மற்றும் எச்எஸ்பிசி போன்ற தனியார் வங்கிகள் கணக்கு இல்லாதவர்களுக்கு படிவம் அல்லது அடையாள அட்டை கேட்கப்படும் என்று அறிவித்துள்ளன. ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யெஸ் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் படிவம் அல்லது அடையாளச் சான்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா வங்கி, தங்களுக்கு எந்த படிவமும் தேவையில்லை, ஆனால் கணக்கு இல்லாதவர்களுக்கு அடையாளச் சான்று தேவை என்று கூறியுள்ளது. ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி ஆகிய வங்கிகள் அனைத்து வாடிக்கையாளர்களும் படிவங்களை நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளன, ஆனால் கணக்கு இல்லாதவர்களுக்கு மட்டுமே அடையாளச் சான்று தேவை என்று தெரிவித்துள்ளன.

எனினும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் கார்டு/எண் வைத்திருக்க வேண்டும். ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சியில் சுமார் 10.8% அல்லது ரூ.3.6 லட்சம் கோடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் என வலுக்கும் கோரிக்கை. கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே சொன்ன முக்கிய தகவல்

click me!