பணி ஓய்வுக்கு முன் இதை பண்ணிருங்க... ரூ.10 கோடி பென்ஷன் தொகை பெற இதுதான் வழி!

By SG BalanFirst Published Apr 11, 2024, 1:35 AM IST
Highlights

40 வயதான ஒரு நபர், முதலீட்டில் சராசரியாக 10% வருமானம் ஈட்டினால், அவர் ரூ.10 கோடி ஓய்வூதிய நிதியைத் திரட்ட, 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,31,688 முதலீடு செய்ய வேண்டும்.

40 வயதுகளில் இருப்பவர்கள், ஓய்வுக்குப் பின் வசதியான வாழ்க்கையைப் பெற உடனே கணிசமான தொகையைச் சேமிக்க ஆரம்பிக்க வேண்டும். அதற்கான சரியான நேரம் இதுவாக இருக்கும். எவ்வளவு குறைந்த வயதில் முதலீட்டைத் தொடங்குகிறோம் அந்த அளவுக்குக் குறைவான மாதத் தவணையை உறுதிசெய்யலாம்.

கூட்டு வட்டி காரணமாக ஓய்வூதியத் திட்டத்தில் தொடக்க வயது முக்கியத்துவம் பெறுகிறது. 20 வயதிலேயே தொடங்கினால் 10% வருவாயைச் சேமித்தால் கூட, மிதமான மாதாந்திர முதலீடுட்டுடன் குறிப்பிடத்தக்க முதிர்வுத் தொகையை ஈட்டலாம்.

20 வயதான ஒருவருக்கு பிபிஎஃப் மற்றும் நிலையான வைப்புத்தொகை போன்ற திட்டங்களில் முதலீடு இருந்தால், அடுத்த 40 ஆண்டுகளில் 7% முதல் 8% வரை வருமானம் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக 12% வருவாயை வழங்கும். சுமார் 16,000 ரூபாய் மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.

வாட்ஸ்ஆப் யூனிவர்சிட்டி வேந்தர் மோடி, புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்

40 வயதான ஒரு நபர், முதலீட்டில் சராசரியாக 10% வருமானம் ஈட்டினால், அவர் ரூ.10 கோடி ஓய்வூதிய நிதியைத் திரட்ட, 20 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,31,688 முதலீடு செய்ய வேண்டும்.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒரு அட்டவணையில் தொகுத்துள்ள தரவு, வெவ்வேறு வயதுக் குழுக்களில் உள்ள தனிநபர்கள் ரூ. 10 கோடி ஓய்வு பெறுவதற்குத் தேவையான மாதாந்திர முதலீடுகள் மற்றும் சராசரி வருமானம் ஆகியவற்றைக் கூறுகிறது. அதன்படி, 20 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்களுக்கு முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் 5% முதல் 14% வரை இருக்கும்.

அதிக வருமானத்துடன் கூடிய முதலீடுகள் மாதாந்திர பங்களிப்புகளை மேலும் குறைக்கின்றன. மாறாக, ரிஸ்க் எடுக்க தயாராக இருப்போருக்கு, 15% முதல் 25% வருவாய் கொடுக்கும் முதலீட்டு உத்திகள் தேவை. இதன் மூலம் மாதாந்திர பங்களிப்பை வெகுவாகக் குறைக்கலாம்.

இந்த அணுகுமுறை 40 முதல் 55 வயது வரை உள்ளவர்கள் முதலீட்டைத் தொடங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது அவர்களின் ஓய்வூதிய முதிர்வுத் தொகையை விரைவுபடுத்தத் தூண்டிகிறது. இருப்பினும் PFRDA கணக்கீட்டைப் பின்பற்றும்போது, அதிக லாபம் அளிக்கும் முதலீடுகளுடன் அதிக ரிஸ்க்களும் இருக்கின்றன என்பதையும் அறிந்துகொள்வது முக்கியம்.

சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதால் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது: பிரதமர் மோடி பேட்டி

click me!