ambuja Cement: உலகின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது?

Published : Apr 14, 2022, 12:42 PM IST
ambuja Cement: உலகின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவை விட்டு வெளியேறுகிறது?

சுருக்கம்

ambuja Cement : உலகின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பாளரான ஹோல்சிம் லிமிட் நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப்பின், இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

உலகின் மிகப்பெரிய சிமெண்ட் தயாரிப்பாளரான ஹோல்சிம் லிமிட் நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப்பின், இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 இந்தியாவில்தான் நடத்திய அம்புஜா சிமெண்ட் மற்றும் ஏசிசி நிறுவனங்களை விற்க உள்ளதாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

17 ஆண்டுகளுக்கு முன்

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த ஹோல்சிம் நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்து அம்புஜா சிமெணட் நிறுவனத்தைத் தொடங்கியது. இந்நிலையில் இப்போது ஹோல்சிம் நிறுவனம் வெளியேறுவதாக ப்ளூம்பெர்க்  செய்தி வெளியிட்டுள்ளது.

ப்ளூம்பர்க்  செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் “ அம்புஜா சிமெண்ட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 960 கோடி டாலராகும். இதில் ஹோல்சிம் நிறுவனம் 63.1 சதவீத பங்குகளை ஹோல்டரின்ட் முதலீடு நிறுவனம் மூலம் வைத்துள்ளது. ஏசிசி நிறுவனத்தில் ஹோல்டரின்ட்  முதலீட்டு நிறுவனம் 4.48 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது.

பேச்சுவார்த்தை

ஹோல்சிம் நிறுவனம் தனது நிறுவனங்களை விற்பது தொடர்பாக ஜேஎஸ்டபிள்யு மற்றும் அதானி குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களிடம்பேசி தனது விருப்பங்களைத் தெரிவித்தது. ஆனால், இவை அனைத்தும் முதல்கட்டத்தில்தான் இருக்கின்றன, இறுதி நிலைக்கு வரவில்லை எனத் தெரிகிறது” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கடன் அடைப்பு

கடந்த 2015ம் ஆண்டு ஹோல்சிம் நிறுவனம் பிரான்ஸைச் சேர்ந்த லாபார்ஜ் நிறுவனத்துடன் இணைந்து லாபார்ஜ்ஹோல்சிம் என்று மாறியது. சமீபகாலங்களாக ஹோல்சிம் நிறுவனம் தனது சொத்துக்களை விற்று கடன்களைச் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹோல்சிம் நிறுவனம் தனது பிரசேில் யுனிட்டை 100 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்தது. அதுமட்டுமல்லாமல், ஜிம்பாப்வேயில் இருக்கும் நிறுவனத்திலும் முதலீட்டை பிரிக்க முயன்றது.

சந்தை மதிப்பு

2022ம் ஆண்டு இந்தியாவில் சிமெண்ட் தொழில் 7 சதவீதம் வரை வளர்ச்சி அடையும் என்று தெரியவந்துள்ள நிலையில் ஹோல்சிம் நிறுவனம் தனது அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனங்களை விற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.14 லட்சம் கோடியாகும். இதில் அம்புஜா சிமெண்ட்ஸ் மட்டும் ரூ.73,349 கோடியாகும். கடந்த 6ம் தேதி முதல் அம்புஜா சிமெண்ட் பங்குகள் விலை 16 சதவீதம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!
அனில் அம்பானிக்கு அதிர்ச்சி.! அமலாக்கத்துறை எடுத்த அஸ்திரம்.. இடியாப்ப சிக்கலில் ரிலையன்ஸ் பவர்