18 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக ஆன்-லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
18 ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கப் போவதாக ஆன்-லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் நிலையற்ற பொருளாதாரச்சூழல், பொருளாதார மந்நிலையால் இந்த முடிவை எடுக்க இருப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன்டி ஜேசே இந்த முடிவை தனது நிறுவனத்தின் ஊழியர்களிடம் தெரிவித்தார். உண்மையில், கடந்த நவம்பர் மாதம் அமேசான் நிறுவனம் அறிவித்தபடி, 10ஆயிரம் ஊழியர்களை மட்டுமே குறைக்கப்போவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதைவிட கூடுதலாக 8 ஆயிரம் ஊழியர்களை அமேசான் வேலையிலிருந்து நீக்க உள்ளது.
கூகுள் நிறுவனத்துக்கு ரூ.133.70 கோடி அபராதம்: மேல்முறையீட்டில் என்சிஎல்ஏடி உத்தரவு
இது குறித்து அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஆன்டி ஜேசே கூறியதாவது:
கடந்த காலங்களில் அமேசான் நிறுவனம் நிச்சயமற்ற மற்றும் கடினமான பொருளாதார சூழலைகளை எதிர்கொண்டது வரும் காலத்திலும் தொடர்ந்து எதிர்கொள்வோம். நிர்வாகத்தில் நாங்கள் செய்யும் இந்த மாற்றங்கள் வலுவான செலவுக் கட்டமைப்புடன் எங்களது நீண்ட கால வாய்ப்புகளைத் தொடர உதவும்
பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல், பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் 10ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து படிப்படியாக நீக்க இருப்பதாக கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தோம். அந்த எண்ணிக்கையில் கூடுதலாக 8ஆயிரம் பேரை அதாவது 18ஆயிரம் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க இருக்கிறோம் என்பதை உங்களுடன் பகிர்கிறேன்
வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்கள் அடுத்து சந்திக்கும் பிரச்சினைகள், கடினங்களை நிறுவனம் அறியும். ஆனாலும், இந்த முடிவை நிறுவனம் மிகுந்த கனத்த மனதுடன்தான் எடுத்துள்ளது.
வேலையிலிருந்து நீக்கப்படும் ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டத்துக்காக பணியாற்றி வருகிறோம், அவர்களுக்கு நிதியுதவி, மருத்துவக் காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளி வேலை வாய்ப்பு ஆகிய பேக்கேஜ்களை வழங்க இருக்கிறோம்.
பட்ஜெட்டில் உரம், உணவு மானியத்தை ரூ.3.70 லட்சம் கோடியாகக் குறைக்க மத்திய அரசு திட்டம்
முதல் கட்டமாக ஐரோப்பிய நாடுகளில் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்த பணி ஜனவரி 18ம் தேதியிலிருந்து தொடங்கும்.
எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளில் ஒருவர் இந்தத் தகவலை முன்கூட்டியே கசியவிட்டதால் இந்ததகவலை இப்போது நாங்கள் வெளியிடுகிறோம்” எனத் தெரிவித்தார்