Parameswaran Iyer: நிதி ஆயோக் புதிய சிஇஓ: யார் இந்த பரமேஸ்வரன் ஐயர்?- 10 முக்கியத் தகவல்கள்

By Pothy RajFirst Published Jun 25, 2022, 9:16 AM IST
Highlights

Parameswaran Iyer: நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயரை மத்திய அரசு நேற்று நியமித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு பரமேஸ்வரன் ஐயர் இந்தப் பதவியில் இருப்பார்.

நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பரமேஸ்வரன் ஐயரை மத்திய அரசு நேற்று நியமித்துள்ளது. அடுத்த இரு ஆண்டுகளுக்கு பரமேஸ்வரன் ஐயர் இந்தப் பதவியில் இருப்பார்.

கடந்த 6 ஆண்டுகளாக நிதிஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த அமிதாப் காந்த் கடந்த 20ம் தேதியுடன் ஓய்வு பெற்றதைத்தொடர்ந்து, பரமேஸ்வரன் ஐயர் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 

யார் இந்த பரமேஸ்வரன் ஐயர்?

1.    பரமேஸ்வரன் ஐயர் கடந்த 1959ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி ஸ்ரீநகரில் பிறந்தவர். 

2.    பரமேஸ்வரன் ஐயரின் தந்தை விமானப்படை அதிகாரி. பரமேஸ்வரன் தனது பள்ளிப்படிப்பை டேராடூனில் உள்ள தி டூன் பள்ளியிலும், கல்லூரி படிப்பை டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரியிலும் படித்தார்.

கிரெடிட் கார்டு வாங்க முடிவா! 6 முக்கிய அம்சங்களை படிச்சுட்டு முடிவு எடுங்க

3.    1981ம் ஆண்டு உ.பி. கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் தேர்ச்சி பெற்றார். 2009ம் ஆண்டுவரை பரமேஸ்வரன் ஐயர் சிவில் சர்வீஸ் பணியிலிருந்து அதன்பின் விருப்ப ஓய்வு பெற்றார்.

4.    அதன்பின் 2009ம்ஆண்டு உலக வங்கியின் சிறப்பு சுகாதார வல்லுநராக பரமேஸ்வரன் ஐயர் பணியாற்றினார்.

5.    வியட்நாம், சீனா, எகிப்து, லெபனான், வாஷிங்டன் ஆகிய நாடுகளில் உலக வங்கிக்காக பரமேஸ்வரன் ஐயர் பணியாற்றியுள்ளார். 

6.    2016ம் ஆண்டு மத்திய அரசு  ஸ்வச் பாரத் திட்டத்தை தொடங்கி அதை செயல்படுத்தும் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயரை நியமித்தது. வீடு தோறும் கழிவறைகள் கட்ட வேண்டும், திடக்கழிவு மேலாண்மை, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் அலுவலகங்களையும், பொது இடங்களையும் வைத்திருக்க வேண்டும் என்ற பிரச்சாரத்திட்டம் வகுக்கப்பட்டது.

7.    மத்திய அரசு கொண்டு வந்த வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதிக்கான ஜல் ஜீவன் திட்டத்துக்கும் கூடுதல் பொறுப்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டார். 

8.    2020ம் ஆண்டு ஸ்வச் பாரத் திட்டத்திலிருந்து விலகிய பரமேஸ்வரன் ஐயர் மீண்டும் உலக வங்கியில் இணைந்து பணியாற்றினார். 2030ம் ஆண்டுக்கான நீர் வழங்கல் பிரிவு எனும் உலக வங்கித் திட்டத்தின் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் செயல்பட்டார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் தற்போது நிதி ஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். 

நிதிஆயோக் சிஇஓவாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்: ஸ்வச் பாரத் திட்ட வெற்றி நாயகர்

9.    குடிநீ்ர் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரிவில் பரமேஸ்வரன் ஐயருக்கு ஏறக்குறைய 25 ஆண்டுகள் சர்வதேச அனுபவம் இருக்கிறது. 

10.    அகமதாபாத்தில் செயல்படும் ஐஐஎம் உயர் கல்வி நிறுவனத்தில் மேலாண் நிர்வாகம் தொடர்பாக கவுரவ விரிவுரையாளராகவும் பரமேஸ்வரன் ஐயர் பணியாற்றினார். 

11.    இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளை எழுதும் வழக்கத்தை பரமேஸ்வரன் ஐயர் கொண்டிருந்தார். 

click me!