
மத்தியில் இருந்து கூடுதலாக தமிழகத்திற்கு , 20 கம்பெனி துணை ராணுவ படையினர், வந்து தங்கி உள்ளதாக கூறப்படுகிறது . அவர்கள் எதற்காக கூடுதலாக வரவழைக்கப் பட்டுள்ளனர் ? சாதாரண நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளதா அல்லது தமிழகத்தில் பெரிய அளவில் வருமானவரித்துறை சோதனை நடத்த திட்டமிட பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்கள் வரவழைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே ஹைதராபாத்தில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில் ஏராளமான ஐ ஆர் எஸ் அதிகாரிகள் தற்போது பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதிலிருந்து , அடுத்ததாக ஒரு பெரிய ரெய்டுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் தயாராவதாக கூறப்படுகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்து யாரெல்லாம் சிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.