
மோடியின் “நிதி ஆயோக் கூட்டம்” - வரும் 27 ஆம் தேதி முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு......!!!!
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிப்பு வெளியான பிறகு, மக்கள் தற்போது பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்,.
மக்கள் அனுபவிக்கும் இந்த இன்னல்களை எப்படி போக்குவது ? இதற்கு என்ன மாற்று ஏற்பாடு என தற்போது மோடி அவர்கள் சிந்தித்து வருகிறார். இதனை தொடர்ந்து, வரும் 27 ஆம் தேதி, நிதி ஆயோக் கூட்டம் நடத்த உள்ளார் மோடி.
இந்த கூட்டத்தில், நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர், உறுப்பினர்கள் மட்டுமின்றி பொருளாதார வல்லூநர்கள், தொழிற்துறை பிரதிநிதிகளும் பங்கேற்று கருத்துக்களை தெரிவிப்பார்கள் என தெரிகிறது.
மேலும், ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் எப்படி திட்டம் வகுப்பது பொருளாதார வீழ்ச்சியை எப்படி சமாளிப்பது, சிறு, குறு, தொழில்களை எப்படி மேம்படுத்துவது என்பன உள்ளிட்ட பல முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
மேலும், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன.
ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு தற்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதத்தில் இருந்து சரிவடைந்து உள்ளது என்பது குறிபிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.