பள்ளி  முதல்வர்களுக்கு “ ஆப்பு”..... !!!   சிபிஎஸ்இ எடுத்த  அதிரடி முடிவு  .....!!!

First Published Dec 24, 2016, 9:41 AM IST
Highlights


பள்ளி  முதல்வர்களுக்கு “ ஆப்பு”..... !!!   சிபிஎஸ்இ எடுத்த  அதிரடி முடிவு  .....!!!

இனி வரும் காலங்களில்,  எந்த ஒரு பள்ளியும்,  தங்கள்  பள்ளி முதல்வர்களை  தாமாகவே   நியமனம்  செய்ய   முடியாத  நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, பள்ளி  முதல்வராக  விரும்பினால், ஆசிரியர்கள் முதல்வர் தகுதித் தேர்வு (Principal Eligibility Test-PET)  இந்த தேர்வை எழுதி,  தேர்வு பெற்றால்  மட்டுமே, பள்ளி முதல்வராக  முடியும் என  சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அதாவது  மாநில  அரசு மற்றும்  சிபிஎஸ்இ – கு, முதல்வருக்கான  தகுதி  தேர்வில்  வீட்டோ அதிகாரம் உள்ளதாக சிபிஎஸ்இ  தெரிவித்துள்ளது.

அதன்  காரணமாக ,தற்போது புதிய  விதிமுறைகள்  அமலுக்கு  வரவுள்ளதால் அதன்படி, ஒரு  பள்ளியில் முதல்வராக  சிபிஎஸ்இ  நியமிக்கும்  ஒருவரும் மற்றும் மாநில அரசு  நியமிக்கும்  ஒரு நபரும் இடம்  பெறுவர் என்பது குறிபிடத்தக்கது.

இது மட்டும்  இல்லாமல், தற்போது பள்ளி  முதல்வராக  பதவி வகிக்கும் நபர்கள் கூட இந்த தேர்வை எழுத வேண்டும் என்பது கூடுதல் தகவல்.

எனவே இனி  வரும் காலங்களில்,  பள்ளிகளில்   முதல்வர்  பதவி  பெறுவது  என்பது சற்று  கடினமாகத்தான்  இருக்கும்.

 

click me!