
பாஸ்போர்ட் பெற புதிய விதிமுறை - மத்திய அரசு அறிவிப்பு
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த அனைவரும் மிக எளிய முறையில் இனி பாஸ் போர்ட் பெறலாம் என மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் பெறுவதற்கு, 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் , பிறப்பு சான்றிதழை வழங்க தேவை இல்லை என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பாஸ் போர்ட் பெறுவதற்கு, பிறந்த தேதியுடன் கூடிய பான் கார் டு மட்டுமே போதும் என்றும், கூடுதலாக ஓட்டுனர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டையை சமர்பித்தாலே போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
சான்றிதாழ்களில் சான்றொப்பம் பெற தேவை இல்லை எனவும்
1989 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த வர்கள் பிறப்பு சான்றிதழ் வழங்க தேவை இல்லை
திருமணம் ஆனவர்கள் , திருமண சான்றிதழை சமர்பிக்க தேவை இல்லை எனவும் , மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.
இதனால் இனிவரும் காலங்களில், மிக சுலபமாக பாஸ்போர்ட் பெற முடியும்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.