
கிரிஜாவைத்தியநாதன் எப்படி ?
ரூபாய் நோட்டு விவகாரத்தின் எதிரொலியாக, தற்போது ஒவ்வொரு நாளும் பல புதிய அறிக்கைகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி புது இரண்டாயிரம் ரூபாயையும் பதுக்கி வைத்துள்ளார்கள்ர்கள் பலர்.
இதன் தொடர்ச்சியாக, தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவ், சட்ட விரோதமாக செயல்பட்ட காரணத்தால், அவரது பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இந்நிலையில், புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது ஒவ்வொரு நாளும் சில மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. உயரதிகாரிகள் ட்ரான்ஸ்பர், பதவி நீக்கம், வருமானவரித்துறை சோதனை என பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில், புதிதாக தலைமை செயலாளராக பதவி ஏற்கும் கிரிஜா வைத்தியநாதன் எப்படி என பல தரப்பில் கருத்து வெளியாகி உள்ளது.
கிரிஜாவைத்தியநாதன் எப்படி ?
கிரிஜா வைத்தியநாதன், பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரின் தம்பி மனைவியாவார். இந்த பின்னணியை மட்டும் எடுத்துக் கொண்டு, கிரிஜா வைத்தியநாதன் மூலமாக, தமிழக அரசின் நடவடிக்கைகளை பாஜக கைப்பற்ற நினைப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, தமிழக அரசில் பாஜக தலைமையிலான மத்திய அரசு தலையிட முயற்சிப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள், எஸ்வி சேகரின் உறவினர் என்ற ஒரே காரணத்துக்காக தற்போது கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு ஊடகங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
ஆனால், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளும், கிரிஜா வைத்தியநாதன் குறித்து பேசும் போது, மிகச் சரியான நபரை தமிழக அரசு தேர்வு செய்திருப்பதாகக் கூறுகின்றனர்.
மேலும், ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் மூத்தவரும், ஏராளமான முக்கியத் துறைகளில் அனுபவம் நிறைந்தவராகவும் இருக்கும் கிரிஜா வைத்தியநாதன், இப்பதவிக்கு மிகச் சரியானவர் என்று கூறுகிறார்கள்.
பணியில் அப்பழுக்கற்றவரும், மிகச் சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவருமாக கிரிஜா வைத்தியநாதன் விளங்குவதாகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதே சமயம், திமுக, அதிமுக என எந்த கட்சிப் பின்னணியும் இல்லாதவர் கிரிஜா வைத்தியநாதன் என்றும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள் தகவல் அறிந்தவர்கள்.
இனியாவது தமிழகத்தில் பல மாற்றம் வருமா என மக்களை சிந்திக்க வைத்துள்ளது தமிழக மக்களை .....!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.