
கோடீஸ்வரர், பங்குமுதலீட்டாளர் ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா விமான நிறுவனத்தின் முதல் போயிங் விமானம் டெல்லி இ்ந்திராகாந்தி விமானநிலையத்துக்கு வந்து சேர்ந்தது.
சீட்டல் நகரிலிருந்து புறப்பட்ட ஆகாசா விமானம், டெல்லி விமானநிலையத்துக்கு இன்று காலை வந்து சேர்ந்தது.
ராகேஷ் ஹூன்ஹூன்வாலாவின் ஆகாசா ஏர் வேஸ் நிறுவனம் ஜூலை மாதம் தனது முதல் வர்த்தகரீதியான விமான சேவையைத் தொடங்கப்போவதகாவும், முதல் விமானம் ஜீன் மாதம் நடுப்பகுதியில் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது.அதுபோல் இன்று காலை விமானம் வந்து சேர்ந்தது
அமெரிக்காவின் போர்ட்லாந்தின் போயிங் நிறுவனம் ஆகாசா ஏர் விமான நிறுவனத்துக்காக போயிங் 737 மேக்ஸ் விமானத்தை பிரத்யேகமாக தயாரித்து வழங்கியுள்ளது.
2023ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 18 விமானங்களை வழங்க இருப்தாகவும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
72 போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் ராகேஷ் ஹூன்ஹூன்வாலா ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த விமானங்கள் அனைத்தும், எரிபொருளை மிச்சப்படுத்தி பறக்கும் சிஎப்எம் லீப் பி ரக எஞ்சனால் வடிவமைக்கப்பட்டவை.
ஆகாசா விமானநிறுவனமும் விமான சேவையில் ஈடுபடுவதற்கான அனுமதியை டிஜிசிஏ வழங்கியுள்ளது. இதையடுத்து, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் விமான சேவைத் தொடங்கும்.
ஆகாசா விமானநிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஆகாசா விமான நிறுவனத்தின் முதல் விமானம் வந்து சேர்ந்தது. விரைவில் இந்தியாவில் வர்த்தகரீதியான சேவையைத் தொடங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆகாசா விமானநிறுவனத்தின் தலைமை நி்ர்வாக அதிகாரி வினய் துபே கூறுகையில் “ எங்களின் முதல் விமானம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது முக்கியமான மைல்கல். இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டணத்தில் பயணிக்கக்கூடிய விமான சேவையை வழங்கும் கட்டத்துக்கு நெருங்கிவிட்டோம்”எனத் தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.