Gold rate today: ஆபரணத் தங்கம் சவரணுக்கு ரூ.160 குறைந்தது: இன்றைய விலை நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Jun 22, 2022, 10:30 AM IST
Highlights

Gold rate today:ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வதுநாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 2-வதுநாளாக இன்றும் விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் கிராம் ஒன்றுக்கு 20 ரூபாயும், சரணுக்கு 80 ரூபாயும் குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய நிலவரப்படி கிராம் ரூ.4,765க்கும், சவரண் ரூ.38,120க்கும் விற்பனையானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,745 ஆகவும், சவரணுக்கு, ரூ. 160 குறைந்து, ரூ.37 ஆயிரத்து960க்கும் விற்பனையாகிறது. 

தங்கத்தின் விலை கடந்த 15 தேதி முதல்  சவரண் ரூ.38 ஆயிரத்துக் கீழ் குறைந்திருந்தது. ஆனால், அதன்பின் மீண்டும் உயர்ந்து ரூ.38ஆயிரத்துக்கு மேல் சென்றது. 7 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தங்கத்தின் விலை ரூ.38 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளது.

 பங்குச்சந்தையில் நேற்று உயர்வு ஏற்பட்டதையடுத்து, தங்கத்தின் விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்து வரும் நிலையில் இப்போது முதலீடு செய்வது சரியானதாக இருக்கும் சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

 அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிலும் பெரிதாக சரிவு இல்லை என்பதால், தங்கத்தின் விலையிலும் பெரிதாக மாற்றத்துக்கு வாய்ப்பில்லை, ஆதலால், தங்கம் வாங்குவதற்கு உகந்த நேரம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்

வெள்ளி விலை இன்று காலை குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 பைசா குறைந்து ரூ.66.00க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோரூ.300 குறைந்து ரூ.66,000க்கு விற்கப்படுகிறது.

click me!