card tokenisation: july-யில் அமலாகும் டோக்கனைஷேசன் தெரியுமா? கிரெடிட், டெபிட் கார்டை எப்படி பயன்படுத்துவது?

By Pothy RajFirst Published Jun 22, 2022, 8:50 AM IST
Highlights

card tokenisation :ஜூலை முதல் தேதி முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதமுறை அமலாகிறது. இதன்படி, ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையதளங்கள் இனிமேல் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. 

ஜூலை முதல் தேதி முதல் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் டோக்கனைசேஷன் விதமுறை அமலாகிறது. இதன்படி, ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையதளங்கள் இனிமேல் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. 

இந்த புதிய விதியை வகுத்த ரிசர்வ் வங்கி, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டெபிட், கிரெடிட்கார்டு டோக்கனைஷேசன் விதிகள் கொண்டுவரப்படுகிறது. இந்தப் புதிய விதிகளை ஏற்க 2022, ஜனவரி 1ம் தேதி காலக்கெடு விதித்திருந்தது ரிசர்வ் வங்கி, பல்வேறு நிறுவனங்கள் கோரிக்கையையடுத்து, ஜூலை 1ம் தேதி நீட்டிக்கப்பட்டது.இதன்படி, புதிய டோக்கனைசேஷன் விதிகள் ஜூலை முதல் அமலாகின்றன

டோக்கனைசேஷன் என்றால் என்ன

டோக்கனைசேஷன் விதிகள் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்-லைனில் பொருட்கள், சேவைகள், பணப்பரிவர்த்தனை செய்யும்போது, தங்களின் கார்டுகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்காமல் பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வதாகும்.

 இந்த முறையில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைன் நிறுவனங்கள் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆன்-லைன் நிறுவனங்கள் ஏற்கெனவே வாடிக்கையாளர்கள் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தாலும் அதையும் அழித்துவிட வேண்டும். அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், பின், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்கக்கூடாது.

எப்படி செயல்படும்?

ஆன்-லைன் வர்த்தகத் தளங்களில் வாடிக்கையாளர்கள் குறித்த எந்தவிவரங்களும் சேமிக்கப்படாது என்பதால், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருமுறை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யும்போதும் கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி, பெயர் ஆகியவற்றை பதிவிட்டு பரிவர்த்தனை செய்ய வேண்டும். இந்த விவரங்கள் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தெரியாது.
கிரெடிட், டெபிட் கார்டுகளில் எவ்வாறு டோக்கனைசேஷன் செய்வது

1.    ஆன்-லைனில் இணையதளத்தில் வழக்கமாக ஒரு பொருளையோ அல்லது சேவையை வாங்க வேண்டும்

2.    அதில் பணம் செலுத்தும் பக்கம் வந்ததும் கிரெடிட்கார்டு அல்லது டெபிட் கார்டை கிளிக் செய்து கார்டின் சிவிவி எண்ணை பதிவிட வேண்டும்.

3.    செக்யூர் யுவர் கார்டு அல்லது சேவ் கார்டு அஸ் பெர் ஆர்பிஐ கெய்ட்லைன்ஸ் என்பதில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்ய வேண்டும்

4.    பயன்பாட்டாளர் செல்போன் எண்ணுக்கு ஒடிபி எண் வரும். அதைபதிவிட்டு பொருட்களை வாங்கலாம். இந்த முறையில் ஆன்-லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சேகரிக்க முடியாது.
 

click me!