debit card new rules: ஆறுதலான தகவல்! ஜூலை முதல் அமலாகும் Credit,debit card புதிய விதிகள் தெரியுமா?

By Pothy RajFirst Published Jun 22, 2022, 8:17 AM IST
Highlights

debit  card new rules :கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே ஜூலை முதல் தேதி முதல் அமலாகும் புதிய விதிகள் ஆறுதலாகத்தான் இருக்கும். ஏனென்றால்,ஆன்-லைன் இணையதளங்கள் இனிமேல் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. 

கிரெடிட், டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்குமே ஜூலை முதல் தேதி முதல் அமலாகும் புதிய விதிகள் ஆறுதலாகத்தான் இருக்கும். ஏனென்றால்,ஆன்-லைன் இணையதளங்கள் இனிமேல் வாடிக்கையாளர்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது. 

இந்த புதிய விதியை வகுத்த ரிசர்வ் வங்கி, ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்துகிறது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக கடந்த ஆண்டு டெபிட், கிரெடிட்கார்டு டோக்கனைஷேசன் விதிகளை வகுத்தது. இதன்படி எந்த ஆன்-லைன் வர்த்தகரும் சர்வரில் வாடிக்கையாளர்களின் விவரங்களை சேமித்து வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது, கார்டு-ஆன்-ஃபைல் டோக்கன்களை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. நாடு முழுவதும் கார்டு டோக்கன்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு ஜனவரி 1 முதல் ஜூலை 1 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான பரிவர்த்தனை செய்ய உதவும் வகையில், மறைக்கப்பட்ட டோக்கன்களாகச் சேமிக்கப்படும். வாடிக்கையாளர் விவரங்களை வெளியிடாமல் பணம் செலுத்த இந்த டோக்கன்கள் அனுமதிக்கும். ஜூலை 1ம் தேதி முதல் ஆன்-லைன் மின்னணு வர்த்தகத் தளங்கள் வாடிக்கையாளர் தொடர்பான எந்தவிதமான விவரங்களையும் சேமித்து வைக்கக் கூடாது. 

ஜூலை 1ம் தேதி முதல் கார்டு டோக்கனைசேஷன் கட்டாயமாக்கப்படாது. இனிமேல் வாடிக்கையாளர்கள் அனுமதி தராவிட்டால், ஒவ்வொருமுறையும் பொருட்களை வாங்கும்போதும் வாடிக்கையாளர்கள் தங்களின் பெயர், கார்டு எண், வேலிடிட்டி, சிவிவி ஆகியவற்றை பதிவிட்டு பொருட்களை வாங்க வேண்டியதிருக்கும். ஆன்-லைனில் கார்டுமூலம் பேமெண்ட் செய்ய நேர்ந்தாலும் இந்த முறையைத்தான் பின்பற்ற வேண்டியதிருக்கும்.

ஒருவேளை டோக்கனைசேஷனை வாடிக்கையாளர் ஏற்றுக்கொண்டால், சிவிவி எண் அல்லது ஒடிபி எண்ணை அவர் மட்டும் அறியும் வகையில் பதிவிட்டு பணம் செலுத்தலாம்.

டோக்கனைசேஷன் முறை என்பது முற்றிலும் கட்டணமில்லாதது. வாடிக்கையாளர்கள் கார்டுகள் மூலம் எளிதாக பேமெண்ட் செய்ய உதவும். ஆனால், இந்த டோக்கனைசேஷன் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டும்தான் பொருந்தும்

click me!