fixed deposit interest: வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டியைவிட ஒரு திட்டத்தில் அதிக வட்டி கிடைத்தால் எதில் முதலீடு செய்வோம். அந்தத் திட்டத்தில்தானே. நம்முடைய பணத்துக்கு யார் அதிக மதிப்பு அளிக்கிறார்களோ அவர்களிடம்தான் அளிப்போம்
வைப்பு நிதியில் கிடைக்கும் வட்டியைவிட ஒரு திட்டத்தில் அதிக வட்டி கிடைத்தால் எதில் முதலீடு செய்வோம். அந்தத் திட்டத்தில்தானே. நம்முடைய பணத்துக்கு யார் அதிக மதிப்பு அளிக்கிறார்களோ அவர்களிடம்தான் அளிப்போம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, பஞ்சாப் நேஷனல்வங்கி, பேங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் வைப்பு நிதிக்கு(Fixed deposit) அதிகமான வட்டி அளிக்கின்றன. ஆனால், இந்த வங்கிகளில் வைப்பு நிதியில் முதலீடு செய்யும் முன், அஞ்சல்துறையில் இருக்கும் நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட்(National Savings Time Deposit Account ) பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அஞ்சலகத்தில் உள்ள நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் கிடைக்கும் வட்டி வைப்பு நிதியில்கிடைக்கும் வட்டியைவிட அதிகம். அப்படியென்றால், எந்தத் திட்டத்தில் முதலீடு செய்வோம். அஞ்சலகத் திட்டத்தில்தானே.
அஞ்சலகத்தில் செயல்படும நேஷனல் சேவிங்ஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட் திட்டத்தில் நாம் செய்யும்முதலீட்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு முதலீடு செய்தால் நிலையான வருமானத்தைப் பெற முடியும்
ஒன்று முதல் 5 ஆண்டுகள்வரை டைம் டெபாசிட் திட்டத்துக்கு 5.5 சதவீதம்முதல் 6.7சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ரூ.1000 வரை முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை.
வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டிவருமானத்துக்கு வரி செலுத்த வேண்டும். அதாவது ஒரு நிதியாண்டில் வைப்பு நிதியிலிருந்து ரூ.40ஆயிரத்துக்கு குறைவாக வட்டி வருவாய் பெற்றால் வரி செலுத்த தேவையில்லை. அதற்கு மேல் வட்டி வருமானம் வந்தால் வரி செலுத்த வேண்டும்.ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 50ஆயிரம்வரை வட்டி வந்தால், வரி இல்லை. டிடிஎஸ் மட்டும் 10 சதவீதம் பிடிக்கப்படும்.
5 ஆண்டுகள்வரை வைப்பு நிதியில் டெபாசிட் செய்தால், வருமானவரிச்சட்டம் 1961, 80சி பிரிவில் வரிவிலக்கு உண்டு. இந்த அடிப்படையில் வருமானவரி செலுத்துவதில் ரூ.1.50லட்சம் வரை விலக்கு பெற முடியும். வங்கியில் செய்யப்படும் வைப்பு நிதியும் 5 ஆண்டுகள் வரை டெபாசிட் செய்திருந்தால், அதற்கும் வரிவிலக்கு உண்டு