ஜியோவுக்‍கு போட்டியாக களத்தில் இறங்கிய ஏர்டெல் : ஓராண்டுக்கு இலவச திட்டங்கள்!

First Published Jan 5, 2017, 8:28 PM IST
Highlights


ஜியோவுக்‍கு போட்டியாக களத்தில் இறங்கிய ஏர்டெல் : ஓராண்டுக்கு இலவச திட்டங்கள்!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கயாளர்களை தக்கவைக்க இலவச டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

வாய்ஸ் கால், டேட்டா, மெசேஜ் என அனைத்தையும் இலவசமாக அளித்து அனைத்து தொலைத்தொடர்பு  நிறுவனங்களையும் ஆட்டம் காண வைத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ. அதன் இலவச சேவை வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை மெல்ல இழந்து வருவதாக தெரிகிறது. அதனை ஈடுகட்ட பல்வேறு நிறுவனங்களும் இலவச சேவை திட்டங்களை அறிவித்து வருகின்றன.

தற்போது, ஏர்டெல்லும் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஒரு மாதத்திற்கு 3 GB அளவிலான 4G டேட்டாவை இந்த ஆண்டின் இறுதி வரை அளிக்கிறது ஏர்டெல் நிறுவனம். இது மற்ற நெட்வொர்க்குகளிலிருந்து ஏர்டெலுக்கு மாறுவோருக்கும், பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் 4Gக்கு அப்கிரேடு ஆகும் ஏர்டெல்லின் தற்போதைய வாடிக்கையாளர்களும் இந்த சேவையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இச்சேவை 4G மொபைல்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ரூ. 345க்கு எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள், 1 GB 4G டேட்டா என்ற திட்டத்தினை ஏர்டெல் அறிவித்திருந்தது, தற்போது புதிய 4G ஹேண்ட்செட்களில் ஏர்டெல் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு, 345 பிளானில் 4 GB டேட்டா கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஏர்டெல் நிறுவனம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தாக்கம் இதர அனைத்து நெட்வொர்க்குகளும் சலுகை திட்டங்களை அறிவிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!