chandrasekaran: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகஇருக்கும் என்.சந்திரசேகரன் ஏர் இந்தியா தலைமை நிர்வாகியாக திடீரென நியமிக்கப்பட்டது தற்காலிகமானதே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராகஇருக்கும் என்.சந்திரசேகரன் ஏர் இந்தியா தலைமை நிர்வாகியாக திடீரென நியமிக்கப்பட்டது தற்காலிகமானதே என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
ஏர் இந்தியாவுக்கு புதிய சிஇஓ கிடைக்கும் வரை சந்திரசேகரன் இந்தப் பதவியில் நீடிப்பார் அதன்பின் விலகிவிடுவார் என்று டாடா குழும வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைப் படிங்க: TATASONS:டாடா குழுமத்தின் தலைவராக சந்திரசேகரன்: 2-வதுமுறையாக நியமிக்க இதுதான் காரணம்
undefined
துருக்கி ஏர்லைன்ஸ்
ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு அதிகாரபூர்வமாக விற்பனை செய்து, டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் புதிய நிர்வாக இயக்குநராக யார் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தநிலையில் துருக்கி ஏர்லைஸ் முன்னாள் மேலாண் இயக்குநர் இல்கர் ஐஸி கடந்த பிப்ரவரி 14ம் தேதி நியமிக்கப்பட்டார். ஏர் இந்தியாவின் சிஇஓவாகவும், மேலாண் இயக்குநராகவும் ஐஸி நியமிக்கப்பட்டார்.
மறுப்பு
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு கடந்த எதிர்ப்புத் தெரிவித்ததால், தனது நியமனத்தில் சாயம் பூசப்படுகிறது எனக் கூறி அந்தப் பதவியை ஏற்க ஐஸி மறுத்துவிட்டார்.
இதைப்ப டிக்க மறக்காதிங்க: கார்ப்பரேட் இந்தியாவை ஆதிக்கம் செய்யும் தமிழகத்தின் 3 சகோதரர்கள்
சந்திரசேகரன் நியமனம்
இ்ந்நிலையலி், ஏர் இந்தியாவின் புதிய சிஇஓவாக, டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என். சந்திரசேகரன் நேற்று நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே பல்வேறு குழுமங்களின் தலைவராக இருந்து நிர்வாகம் செய்துவரும் சந்திரசேகரன் கூடுதலாகஏர் இந்தியாவையும் நிர்வகிக்க உள்ளார்.
டாடா சன்ஸ் குழுமத்தின் நம்பிக்கையைப் பெற்ற மேலாளர் என்ற பெயருடைய சந்திரசேகரன் ஏர் இந்தியாவின் சிஇஓவாக நியமிக்கப்பட்டது நம்பிக்கையளித்தாலும் இந்த முடிவு தற்காலிகமானதுதான் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ஏர் இந்தியாவுக்கு தகுந்த சிஇஓ கிடைத்தவுடன் அந்தப் பொறுப்பை அவரிடம் சந்திசரேகரன் ஒப்படைத்துவிடுவார் அதுவரை அவர் பதவியில் நீடிப்பார் எனத்த கவல்கள் தெரிவிக்கின்றன
கோரிக்கை
நம்பக்கதன்மை மிகுந்த ஒருவரை சிஇஓவாக நியமியுங்கள் என்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமும் ஏர் இந்தியாவின் புதிய நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டதாகத் தகவல் வெளியானது. அதன் அடிப்படையிலேயே சந்திரசேகரன் சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஏர் இந்தியா நிர்வாகத்தை 5 பேர் கொண்ட குழு நிர்வகித்து வருகிறது.
டாடா சன்ஸ் குழுமத்தின் மூத்த துணைத் தலைவர் நிபுன் அகர்வால் உள்பட 5 உறுப்பினர்கள் உள்ளனர். டாடா குழு வட்டாரங்கள் கூறுகையில் “ விமானப் போக்குவரத்து சிஇஓவாக நியமிக்கப்படுபவர் நம்பிக்கைக் குரியவராக இருக்கவேண்டும். அதிலும் நிறுவனம் முழுமையாக நம்பக்கூடிய ஒருவரைத்தான் அந்தப்பதவியில் நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசும், விமானப் போக்குவரத்து ஆணையமும் ஏர் இந்தியா நிர்வாகக் குழுவிடம் கேட்டுக்கொண்டன. அவ்வாறு இருந்தால்தான், ஊழியர்களுக்கும் நம்பிக்கையளிக்கும், குழுமத்துக்கும் நம்பிக்கையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது” எனத் தெரிவித்தனர்.
இதைப் படிக்க மறக்காதிங்க: TATASONS:நாமக்கல் தமிழர் டாடா குழுமத்தின் தலைவர்: 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு
முதல்முறை
டாடா நிறுவனம் நடத்தும் விஸ்தாரா, ஏர் இந்தியா இந்தியா ஆகிய நிறுவனங்களின் நிர்வாகப் பொறுப்பிலும் வாரியக் குழுவிலும் சந்திரசேகரன் இல்லை. ஆனால், ஏர் இந்தியாவின் சிஇஓவாக முதன்முதலில் நியமிக்கப்பட்டுள்ளார். விமானநிறுவனத்தின் சிஇஓவாக சந்திரசேகரன் நியமிக்கப்படுவதும் இதுதான் முதல்முறை.