Today Gold Rate Chennai: கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்தநிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 அதிகரித்து மீண்டும் ஷாக் அளித்துள்ளது.
Today Gold Rate Chennai: கடந்த 5 நாட்களாக தங்கம் விலை குறைந்தநிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 அதிகரித்து மீண்டும் ஷாக் அளித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாயும், சவரனுக்கு 320 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை நிலவரப்படி, கிராம் ரூ.5,250ஆகவும், சவரன், ரூ.42,000ஆகவும் இருந்தது.
தங்கம் விலை இன்றைய நிலவரம்| சவரனுக்கு 720ரூபாய் சரிந்தது: மிடிஸ் கிளாஸ் மகிழ்ச்சி
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.5,290ஆகவும், சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து ரூ.42 ஆயிரத்து 320ஆகக் அதிகரித்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,290க்கு விற்கப்படுகிறது
கடந்த 5வது நாளாக தங்கத்தின் விலை குறைந்து சவரனுக்கு ரூ.720 சரிந்திருந்தது. ஆனால், இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, மீண்டும் நடுத்தர மக்களுக்கு ஷாக் அளித்துள்ளது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில் தங்கம் கிராம் ரூ.5335 என்ற இருந்தநிலையில் நேற்று மிகக் குறைவாக ரூ.5,250 வரை குறைந்தது. ஆனால், இன்று மீண்டும் 40ரூபாய் உயர்ந்து, ரூ.5,290 என அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில் மட்டும் தங்கம் கிராமுக்கு 45 ரூபாய் குறைந்துள்ளது, அதாவது சவரனுக்கு 390 ரூபாய் குறைந்துள்ளது.
மளமளவெனச் சரிவும் தங்கம் விலை ! நகைப் பிரியர்கள் குஷி: இன்றைய(16-2-2023) நிலவரம்?
வெள்ளி விலை இன்றும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.71.20 ஆக இருந்தநிலையில் கிராமுக்கு 60 பைசா உயர்ந்து, ரூ.71.80 ஆகவும், கிலோ ரூ.71,200 ஆக இருந்தநிலையில், கிலோவுக்கு ரூ.600 ஏற்றம் கண்டு, ரூ.71,800 ஆக அதிகரித்துள்ளது.